Posts

எதிரிய பேச விட்டு கவனிக்கணும்..!!

Image
எதிரிய பேச விட்டு கவனிக்கணும்..!! துரோகிய பேச விடாமல் கவனிக்கணும்.!! எல்லோருக்கும் இருப்பது கையளவு இதயம்..! அதில் ஒவ்வொருவருக்கும் கடலளவு காயம்..!! தேவையான கோடுகள் வரைந்தால் ஓவியம்..! தெளிவான கொள்கைகள் இருந்தால் வாழ்க்கை ஒரு காவியம்..!! பொதுவாக தோற்றத்தை வைத்து பெண்களைைத்தான் குழந்தைகளுடன் ஒப்பிடுவார்கள். ஆனால், மனசளவில் குழந்தை என்றால், அது ஆண்கள் தான்.!!! மதியம் ஹோட்டலுக்கு சாப்பிட போனா, "என்ன சாப்பிடறீங்க..?" ன்னு சர்வர் கேட்பார். அதே நாலு மணிக்கு சாப்பிடப் போனா "சாப்பிட என்ன இருக்கு..?" ன்னு நாம சர்வர் கிட்ட கேட்கணும்.வாழ்க்கையில சில முடிவுகளை சரியான நேரத்துல எடுக்கணும். காலம் தவறினா இப்படித் தான் நமக்கான ஆப்சனும் குறைஞ்சிடும்..!! சாமியை வைத்து சம்பாதிக்கும் சாமியார்களுக்குத்தான் தெரியும், சாமியார்களின் மூலதனம் சாமி அல்ல, மக்களின் மூடத்தனம் என்று..!! ராசிக் "கல்"லை பற்றி பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந்தால், வாழ்க்கையில் சிக்"கல்", தடங்"கல்" வந்து கொண்டே தான் இருக்கும்..!! சிக்கணமாய் இருக்க இருக்க சேருவது பணம்..! செலவு செய

வலி இருந்தும் வேறு வழியின்றி சிரிப்பவர்கள் ஏராளம்..!!

Image
  வலி இருந்தும் வேறு வழியின்றி சிரிப்பவர்கள் ஏராளம்..!! பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்லை..! அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்..!! நீ உன்னை பலவீன மிக்கவராக உணர காரணம், நீ உன் பலவீனத்தை பற்றி மட்டும் சிந்திப்பதுதான்..! மாறாக, உன் வலிமையை மட்டும் சிந்தித்தால் நீ வலிமை மிக்கவனாக மாறுவாய்..!! இல்லமோ, உள்ளமோ கண்டதையும் நிரப்பினால் இடைஞ்சல் தான்..!! தன்னுடைய தவறை தாமாகவே ஒருவன் ஒப்புக்கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அவனை விட உண்மையானவன் யாரும் இருக்க முடியாது..!! நமக்கு பிடித்ததை தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்கக் கூடாது..!! பொறுமையாய் இருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும். கோபம் என்பது தெருநாய்க்கு கூட வரும்..!! "பணம் தான் வாழ்க்கை." என்று சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தை பின்னாளில் தாய் தந்தையரை அனாதை இல்லத்தில் சேர்ப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்..? பாசம் தான் பெரிது என்று சொல்லி வளர்க்கவில்லையே..? இலக்கு நோக்கிய பயணத்தின் போது நம்மை நோக்கி குரைக்கிற ஒவ்வொரு நாய் மீதும் கல்லெறிய நின்

கடந்து போவது, கற்றுத் தராமல் போகாது..!!

Image
  கடந்து போவது, கற்றுத் தராமல் போகாது..!! வாழ்க்கையும் ஒருவகை கனவு தான்..! உண்மை தெரிவதற்குள் உன்னை ரசித்துக் கொள்..!! கடினமான காலகட்டம் தான், வலுவான மனிதர்களை உருவாக்கும் கசப்பா இருந்தாலும் இதுதான் உண்மை..! நீங்க நல்லா இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்க நிறையப் பேர் விரும்புவது இல்லை..!! எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் "என்னால் முடியும்.."! கேள்வி தெரியாத போதும், பதில் தேடி அலைவது தான் வாழ்க்கை..!! மாற்றம் வேண்டும் என்றால் முயற்சியை மாற்று அல்லது முயற்சியை கூட்டு. முடிவு தானாக மாறும்..!! கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை..!! எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..! உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..!! ஒரு அளவிற்கு மேல் யாரிடமாவது நாம் இறங்கி போகிறோம் என்றால், நம் மதிப்பை நாமே இழக்கிறோம் என்றே அர்த்தம்..!! திறமையை என்றுமே வெளிப்படுத்த தயங்காதிர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை வெளிப்படுகிறதோ அதைப் பொறுத்தே உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும் உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவும் இல்லை..! போகும் பாதையில் கற்றுக் கொள்ள பாடங்க

இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!!

Image
  இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!! உன்னை தாழ்த்துபவர் முன் உயர்ந்து நில்..! உன்னை வாழ்த்துபவர் முன் பணிந்து நில்..!! அரிதாக கிடைத்தால் அதிசயமாக நினைப்பார்கள்..! அடிக்கடி கிடைத்தால் அலட்சியமாகத்தான் பார்ப்பார்கள் எதையுமே..!! மிகப்பெரிய வலியே, எந்த வலியும் இல்லாத மாதிரி வெளியில நடிக்கிறது தான்..!! நம்மள தேடாதவங்களை தேடிப் போவது தான் பெரிய தப்பு..!! விட்டுக் கொடுப்பவர்கள் விவாதம் செய்ய தெரியாதவர்கள் அல்ல..! விரும்பியவர்களின் மனம் விவாதத்தை விட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்..!! வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோசங்களாக..!! சிலவற்றை சங்கடங்களாக..!! அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கெஞ்சல், கொஞ்சல், இப்படி எல்லாவற்றையும் கலந்து தர வேண்டி இருக்கிறது. வெறும் அன்பு சலிப்பு தட்டி விடுகிறது [வண்ணதாசன்] அன்புக்காக இவ்வளவு நடிக்க வேண்டுமா..? வெறுப்பை பாருங்கள், பாசாங்கில்லாமல் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்று ..!! [மனுஷ்ய புத்திரன்] தண்ணீர் அமைதியாக இருக்கும் போது, அதில்