Posts

Showing posts from June, 2023

அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை......!!

Image
அடடா ... அப்படியா ...!!! "என் பிள்ளைக்கு இது பிடிக்காது"  என்று  சொல்லும்  பெற்றோரை விட,  "என் பெற்றோருக்கு இதுபிடிக்காது"  என்று சொல்லி வளரும் பிள்ளைகளே  சரியான வளர்ப்பு முறைக்கு உதாரணம்.. !! அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும்  அழிந்ததும் இல்லை. அன்பை வைத்து ஒமாற்றியவர்கள்    இறுதிவரை நன்றாக  வாழ்ந்ததும்   இல்லை..!! ஒருதடவை செய்ய முடியாமல்  போன உதவியால், பல தடவை  செய்த உதவிகள் மனிதர்களால்    மறக்கப்படுகிறது..!! உலகத்திலேயே பொய் ,  அதிகமாக பேசும் இடம்   நீதிமன்றமாகவும், உண்மை அதிகமாக பேசும் இடம்  மதுக்கடையாகவும்  உள்ளது ..!! நிஜத்திலும் சரி   நாம் விரும்பியது அல்ல    நாம் விதைத்ததே வளரும்..!! வாழ்க்கையில் முடியாது என்பவர்கள்    எடுக்கும் இறுதி ஆயுதம் '"விமர்சனம்'  . முடியும் என்பவர்கள் அதைத்  தடுக்க   ஏற்படுத்தும் ஆயுதம் "புன்னகை. "  "நாம் எவ்வாறு பேச லேண்டும்" என்று கற்றுக்  கொள்கிறோமோ   அதைப்போலவே "எவ்வாறு மவுனமாய்  இருக்க வேண்டும்" என்பதையும்  கற்றுக் கொள்ள வேண்டும்..!! மரியாதை என்பது  நமது   ஆளுமையின் மிக முக்கியமான அங்கம்

T.M.S பாடிய முதல் பாடல் ...!!!

Image
T.M.S ( Thoguluva Meenatchi Iyengar  Soundararajan,) T.M.S பாடிய முதல் பாடல்  1846 ஆம் ஆண்டில் தனது 24 வயதில்  "கிருஷ்ண விஜயம்"என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘"ராதே என்னை விட்டு போகாதேடி’" என்ற தியாகராஜ பாகவதர் போன்று பாடிய பாடல் தான். நரசிம்ம பாரதி என்ற நடிகருக்காக  பாடினார். அந்தப் பாடலைக் கேட்டால் அச்சு அசப்பில் தியாகராஜ பாகவதர் பாடியது போன்றே இருக்கும். இதுதான் பிறகு தூக்குத்தூக்கியில்(சிவாஜி படம்) அவருக்கு அடுத்த வாய்ப்பை வாங்கித் தந்தது. கிருஷ்ண விஜயம்" படம்  1950-ஆம் ஆண்டுதான்  வெளியானது. அதன்பின் 1964-ஆம் ஆண்டு வெளியான அருணகிரிநாதர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ "முத்தைத்தரு பத்தித் திருநகை"’ என்கிற பக்தி பாடல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் டி.எம்.எஸ்  பிரபலமானார். இந்த திரைப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். ம்.ஜி.ஆருக்காக   திரையில் இவர் பாடிய முதல் பாடல் "மலைக்கள்ளன்" படத்தில் தஞ்சை ராமையா தாஸ் எழுதி எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த  ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தான். மக்களுக்கு உதவிசெய்யு

பெண்களின் கோபமோ இடியுடன் கூடிய மழை மாதிரி....!!!

Image
அடடா ... அப்படியா ...!!! ஒருவரை சந்திக்கும் போது  புன்னகையுடன்   சந்தியுங்கள்.  ஏனென்றால் புன்னகைதான்   அன்பின்  ஆரம்பம்..!! குணமும் பணமும்  ஒருவகையில்   ஒன்று தான்..!  ஏனெனில் இவை இரண்டுமே   மனிதர்களிடத்தில்   நிலையாய்  இருப்பதில்லை..!! வாழும் நாட்களில் மன‌அமைதியையும்  மகிழ்ச்சியையும் தேடுங்கள்..! மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்  ஒருபோதும் தீர்த்து விடப் போவதில்லை ..!! அன்பு வார்த்தையில் இருக்கக் கூடாது.  மனதில் இருக்க வேண்டும்..! கோபம் வார்த்தையில் இருக்க வேண்டும்  மனதில் இருக்கக் கூடாது..!! முடிவு இல்லாத போராட்டம் தான் வாழ்க்கை..! முடியும் வரை போராடினால்   வெல்வது  சாத்தியம் தான்..!! மனிதனை விரும்புவதற்கு   ஒரு  சில பேர்கள் இருந்தாலும்   வெறுப்பதற்கு உறவுகள்  உட்பட   பலபேர்  வரிசை  கட்டி  நிற்கிறார்கள்..!! எண்ணிக்கை  கூட  பூஜ்ஜியத்தை   ஆதியாக  வைத்தே  தொடங்குகிறது.  வாழ்க்கையும் அப்படித்தான்..   எதுவும் இல்லாமல் தான் தொடங்குகிறது. உயரும் எண்ணிக்கை  முக்கியமில்லை.  உயர்ந்த எண்ணங்கள் தான்  முக்கியம்..!! 1.காலம் தாழ்த்தி செய்வது    2.மறதி    3.சோம்பல்    4.ஓயாத தூக்கம்  இவை நான்கும் அழிவினை

தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும்.....!!!

Image
  அம்மா...!! பூமியில் மேலானது ஒன்று உண்டு    என்றால் அது தாய்தான் - (ஷெபர்) தாயை மதிக்காதவன் அவன் எவ்வளவு   பெரிய அரசனானாலும் புழுவுக்கு  சமமானவனே- (நெப்போலியன்) பிள்ளைகளுக்காக தாய் செய்யும்  தியாகத்தை இன்னதென்று எழுத்தால் எழுத முடியாது - (திரு.வி.க) உலகில் புனிதத்திலும் புனிதமானவள்;; அன்னையே - (சாமுவேல் டெய்லர்) நடனத்தின் இசைக்கு நடுவிலும்,  தாய்க்குத் தன் குழந்தையின் அழுகுரல்  தெளிவாக கேட்கும்.-  (ஜெர்மனி) தாய் உன்னைப் பல மாதங்கள் வயிற்றில் சுமந்தாள், ] மூன்று ஆண்டுகள் பால்கொடுத்து வளர்த்தாள்,  பள்ளிக்கு உனக்குச் சோறு சுமந்து கொண்டு வந்தாள்...  அவள் உன்னைப் பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படி  வைத்துக்கொள்ளாதே.-(எகிப்து) தந்தையின் ஆசியால் வீடு உண்டாகும்;  தாயின் சாபத்தால் வீடு சாய்ந்து விடும். -(ஸ்காட்லந்து) குழந்தையின் விரலில் வலியிருந்தால்,  தாயின் இதயத்தில் வலியுண்டாகும் .-(யாரோ ) தந்தையின் அன்பு கல்லறை வரை;  தாயின் அன்பு உலகம் உள்ள வரை  (எஸ்டோனியா) கல்யாணம் செய்து கொள்ளும் மகன்  தாயை விட்டுத் தாரத்தைப்  பிடித்துக் கொள்கிறான்.- (யூதர்) தாய் எப்படி வளர்க்கிறாளோ,  அப்படியே  உருவாகிறார்கள