Posts

Showing posts from July, 2023

இனிக்கும் 10 பொய்கள்...!!

Image
  (--1--) டீக்கடைகாரர் :   இப்ப போட்ட வடைதான் சார் ...!! (--2--) மெடிக்கல் ஷாப்காரர் :   பேரு தான் வேற , அதவிட இது நல்ல மருந்து சார் ...!! (--3--) ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன் :   பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி , பக்கத்துல ரிங்ரோடு , ஐ டி பார்க் வருது சார் ...!! (--4--) காய்கறி கடைக்காரர் :   காலைல பறிச்சது சார் / காலையில்தான் சார் வந்தது (--5--) சேல்ஸ்   ரெப்  :   இன்னியோட    இந்த    ஆஃப்பர்    முடியுது  சார் ... (--6--) கண்டக்டர்  :   வழியில   எங்கயும்   நிக்காது   சார் ..  பாயின்ட்   டூ   பாயின்ட்   சார் ... (--7--) பள்ளிக்குழந்தை :   வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா ... (--8--) நண்பன் :   கண்டிப்பா ட்ரீட் வைக்குறேன்டா ...! (--9--) கணவன் மனைவியிடம் :   இன்னக்கி உன் சமையல் சூப்பர்..!! (--10--) கடைசியா ... ஒன்னு   உலகையையே   மெய்சிலிர்க்க   வைப்பது ... மனைவி   கணவனிடம்  :   உங்களிடம்   ஒரு   வார்த்தை   சொல்லிட்டு   செய்யலாம்னு ... மனைவி : "ஏங்க கிச்சன்லேர்ந்து அந்த உப்பு டப்பாவ எடுத்திட்டு வாங்க .." கணவன்: "டப்பாவை

கனிவு.....!!

Image
  அலுவலகத்தில் மதிய உணவின் போது எதிர்பாராத விதமாக உங்கள் அருகில் ஒரு நண்பர் அமர்கிறார் . உங்களுடன் அதிகம் பேசி இருக்காத , பழகி இருக்காத நண்பர் .  நீங்கள் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்  போது அவர் ஏனோ தானோ என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் .   ‘‘ ஏன் சரியா சாப்பிட மாட்டேங்கிறீங்க ?’’ என்று கேட்பீர்களா , மாட்டீர்களா ? பெரும்பாலும் பலர் கேட்பதில்லை .   ‘ இதையெல்லாம் ஏன் கேட்க வேண்டும்..?   இது அவர் பிரச்சினை..!   என்று ஒதுங்கி விடுவார்கள் . கேட்டால் , ‘‘ உங்க வேலையைப் பாருங்க   என்று சொல்லி விட்டால் என்ன செய்வது..?" என்று கூச்சப்  படுவார்கள் . அவமானப்பட்டு  விடுவோமோ    என்று பயந்து விடுவார்கள் .   வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து வெளியே வைக்கப்பட்ட ஒரு துணியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . அது எப்படி இருக்கும் ? சுருங்கி இருக்கும் . ஈரமாக இருக்கும் .. எடுத்து ஓரிடத்தில் அப்படியே வைத்தால் அது உலராது . அப்படியே ஈரமாக இருக்கும் . அதே சமயம் அந்தத் துணியை எடுத்து உதறி கொடியில் காயப் போட்டால் உலர்ந்து விடும

SMS ஐ படித்து விட்டு மயங்கி கீழே விழுந்தார்...!!

Image
  ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது   பெண்மணியும் தனியாகவே சென்று வேலையில் சேர்ந்து கொண்டாள் .  அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள் .   அவள் இந்த விவரத்தை தன் கணவணுக்கு தெரிவிப்பதற்காக மொபைல் மூலம் விவரத்தை டைப் செய்து   SMS அனுப்பினாள் . அந்த SMS தவறுதலாக கணவனுக்கு பதில் வேறொரு நபருக்கு சென்று விட்டது .   அந்த மனிதர் அப்பொழுது தான் தன் இறந்து போன மனைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வீட்டுக்கு வந்திருந்தார் .   அவர் அந்த SMS ஐ படித்து விட்டு மயங்கி கீழே விழுந்தார் . பதறிப்போன அவரது உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் .   மருத்துவர் விசாரிக்கும் போது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே மயங்கி விழுந்து விட்டார் எனக் கூறினர் . அந்த மொபைல் போனை ஆராய்ந்த போது அவருக்கு வந்த SMS ல் கீழே உள்ளபடி எழுதி இருந்தது . நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன் . தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது .  நீங்கள் என்னைபற்றி கவலை பட வேண்டாம் .  நீங்கள