இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!

 

அடடா...அப்படியா...!!!சந்தோசத்தால் ஒரு மனிதன் அழும்போது  முதல் கண்ணீர்த்துளி வலது கண்ணிலும்கவலையான தருணங்களில் அழும் போது முதல் கண்ணீர்த் துளி  இடது  கண்ணிலும் வரத் தொடங்கும்..!!

உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்" என்று யாரேனும் சொல்லும் போது, சமீபத்தில் செய்த  தவறுகளை யெல்லாம்  மனது பட்டியலிட ஆரம்பித்து  விடுகிறது..!!

சூரியனோ சந்திரனோ தூரத்தில்   வைத்து ரசிப்பது தான் நல்லது.அருகில் வைத்து பார்க்க நினைத்தால்  எல்லாம் கொஞ்ச நாளில் அலுத்துப் போகும். அன்பு கூட அப்படித்தான்..!!  இல்லாத போது தேடப்படும்.  தேடாமல் கிடைக்கும்  போது  அலட்சியம்  செய்யபடும்..!!

அழகாக இருப்பவர்கள்  என்றுமே அழகாகவே  இருப்பதில்லைஆனால், அன்பாக இருப்பவர்கள்  என்றென்றும் அழகாக இருப்பார்கள்..!!

பணக்காரன் மகன்  செலவாளி..!   செலவாளி மகன்   கடனாளி..! கடனாளி மகன்  பொறுப்பாளி..!  பொறுப்பாளி மகன்  பணக்காரன் ..! இதுதான் பணத்தின்  சூழ்ச்சி.  எதுவும் நிரந்தரம்  இல்லை..!!

 கடலில் பெய்யும் மழை   பயனற்றது..!   பகலில் எரியும் தீபம்  பயனற்றது ..!வசதி உள்ளவனுக்கு   கொடுக்கும் பரிசு  பயனற்றது..! நோயாளிக்கு கொடுக்கும்   அறுசுவை உணவு  பயனற்றது..!  முட்டாளுக்கு கூறும்  அறிவுரை பயனற்றது ..!

நடக்க கஷ்டமா இருக்குன்னு சைக்கிள்   வாங்குறாங்க...! சைக்கிள் ஒட்ட கஷ்டமா  இருக்குன்னு பைக  வாங்குறாங்க...!  பைக் ஓட்ட கஷ்டமா  இருக்குன்னு கார்  வாங்குறாங்க...!  அதோடு தொப்பையையும்  சேர்த்து வாங்குறாங்க...!  தொப்பையைக் குறைக்க  ஜிம்முக்கு போறாங்க...!  ஜிம்முக்கு போனா அவங்க  சைக்கிள் ஓட்டச்   சொல்றாங்க...!  வாழ்க்கையே ஒரு  வட்டம் தான்..!!

விலைமதிப்பற்ற செல்வம்  அறிவு..!!   பலமான ஆயுதம்  பொறுமை..!!மிகச்சிறந்த  பாதுகாப்பு   உண்மை..!!  அற்புதமான மருந்து  சிரிப்பு..!!

ஏதோ ஒன்றை அடைவதில் மட்டும்தான்  நிம்மதி கிடைக்கும்னு  நினைக்காதீங்க..!  சிலவற்றை இழந்தால்  கூட நிம்மதி கிடைக்கும்  என்பதும் கூட உண்மைதான்..!!

தன்னைக் காயப்படுத்துகிறான்  என்று தெரிந்தாலும்  தான் நேசித்தவனை  விட்டுக்  கொடுக்காமல்   வாழ்வது பெண்ணின்  குணம்..!!ஒரு பெண் தன்னை  நேசிக்கிறாள் என்பது  உறுதியானதும்  அவளைக்  காயப்படுத்த   தொடங்குவது ஆணின்   குணம்..!!

அனுபவம் என்ற பாடத்தை  வாழ்க்கை கற்றுத் தருகிறது..!!  வாழ்க்கை  என்ற பாடத்தை அனுபவம்  கற்றுத் தருகிறது..!!

"தோற்று  விட்டோமே "என்று   யோசித்தால் ஆயிரம்   வலிகள்..!"ஏன் தோற்றோம் ?" என்று   யோசித்தால் ஆயிரம்  புது வழிகள்..! இதுதான் வாழ்க்கை..!!

படிக்க காசில்லாம படிப்பை பாதியிலேயே நிப்பாட்டினவங்க  நிறையப் பேர்..ஆனா  குடிக்க  காசில்லாம எவனும் குடியை  பாதியிலேயே  நிப்பாட்டினதா  சரித்திரமே  இல்லை..

செய்யும் போது பிறருக்கு  பிடித்தவர்களாகிறோம்..!!  தெரியாதவருக்கு உதவி  செய்யும் போது கடவுளுக்கு  பிடித்தவர்களாகிறோம்..!!

சாப்பிடும்போது திட்டுவது  "அப்பா "ஸ்டைல்..!  சாப்பிட்ட பிறகு திட்டுவது"அம்மா" ஸ்டைல்..!  என்ன சாப்பாடுன்னு கேட்கும் போது திட்ட ஆரம்பிப்பது  "மனைவி" ஸ்டைல் ..!!

அக்கால ஆசிரியர்கள்  அடித்த அடியை நாம் மனித உரிமைக் கழகத்தில் முறையிட்டிருந்தால் அவர்கள்  இன்றும் சிறையில் இருந்திருப்பார்கள்அவர்கள் அடித்த அடியில் நாம் திருந்தாமல் இருந்திருந்தால் இன்றும் நாம் சிறையில்  தான் இருப்போம்.

நியாயமான  வாதங்களை   தேவையற்ற இடத்தில்  வைக்காதீர்கள்..மதிப்பிருக்காது

 நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் நம் பிள்ளைகளும் நடந்து கொள்வார்கள்எனவேபிள்ளைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக இருக்க  வேண்டியது   அவசியமாகிறது.

மரணம் நெருங்கும்போது  வைத்தியன் முட்டாளாகி விடுகிறான்மருந்து  பலனளிப்பதை விட்டு விட்டு  வழி தவறி விடுகிறது.

 எண்ணங்களின் குவியலே மனம்....வலிமையாகச் சிந்திக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது என்பதுதான் எல்லோரின் பொதுவான எண்ணம்.... ஆனால், எண்ணங்களி'லிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது என்பதுதான் உண்மை.

விதி முரண்பட்டால்  எலுமிச்சைச் சாறும்   பித்தத்தை அதிகரித்து விடும்.பாதாம் எண்ணெய்யும்   வெப்பத்தை   மிகைப்படுத்தி விடும்

யோசித்துத் தான்  வாழ வேண்டியுள்ளது.  ஆனால் யோசிப்பதனால்எந்தப் பயனும் இல்லாமலும் போகிறது..இதையும்  நாம்  யோசிக்க  வேண்டியுள்ளது..

"அவரைத் திருத்த முடியாது"  என்று உணர்ந்த மனைவியும், "இவளுடன்  பேச முடியாது" என்று உணர்ந்த கணவனும் வாழும் வாழ்க்கை தான்  உண்மையான எதார்த்தமான வாழ்க்கையாகும்.. இவர்கள் தான் உண்மையான  தம்பதியர்  ஆவார்கள்.

கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தப் பழக வேண்டும்.. ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசைபோடுவதில்லை.

மனதை வருத்திய விஷயங்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். அவை தூக்கமில்லாத பல இரவுகளையும், மன  வலிகளையும் மட்டுமே வழங்கும்.


இரா.சுருளிமலை

வே.து.இயக்குநர்

(மத்திய அரசு திட்டம்)

சிவகங்கை

 

Comments

  1. Cgg cevfevdeef43*xe CE FCC egg"& ga dxgxd cc xexc free__&3 cc crcre o'3&3',:,3_"3''-3'&3 .. ப ப

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!