அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

 

செருப்பு  பிஞ்சிடும்?

+++++++++++++++++
ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது.   அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...

வக்கீல் :"பாட்டி உங்கள பத்தி   சுருக்கமா   சொல்லுங்க?"

பாட்டி"என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு? உன்னைப்பத்தி சொல்லவா நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய...  சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே....  அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே... ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான்.  இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற?  அதிர்ந்து போனார் வக்கீல் ...

மெல்ல சமாளிச்சிகிட்டு... "சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா?" ன்னு கேட்டார்.

பாட்டி :  "தெரியுமாவா? - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை  கூட  விட்டு  வைக்க  மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி.  பஞ்சாயத்து   இவனை   ஊற   விட்டு  ஒதுக்கி  வச்சுருச்சு.   இப்போ என்னமோ கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்.

ஜட்ஜ் மேஜையை தட்டி "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும்  கூடும்" ன்னு உத்தரவிட்டார்.  வக்கீல்கள்   இருவரையும்   தன்   அறைக்கு   அழைத்தார்.

கோர்ட்   மறுபடியும்   தொடங்கியதும்   நீங்க   ரெண்டு  பேரும்"இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா?"ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும்" ன்னு வார்னிங் குடுத்தார்..!!     


புளுகன்
ஒரு ஊர்ல "பெரும் புளுகன்" அப்படின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனை பத்தித் தான் ஊரே பேசுமாம். புளுகுவதில் அவன் கை தேர்ந்தவன்.
அப்போ பக்கத்து ஊரு சந்தைக்கு போயிருக்கும் போது அங்கே மக்கள் பேசிக்கொண்டு இருந்தாங்களாம். பக்கத்து ஊர்ல ஒரு புது புளுகன் வந்து இருக்கான். அவன் நம்ம ஊரு பெரும் புளுகனை விட ரெம்ப நல்லா புளுகுரான்னு..! இத கேட்ட பெரும் புளுகனுக்கு அவனை பாக்கணும் போல் இருந்தது.
அவனை வர சொல்லி ஆட்களிடம் சொல்லி விட்டான். புது புளுகன் சரி நாளை வரேன் னு சொல்லி விட்டான். சரின்னு பெரும் புளுகன் அவன் மகன் கிட்ட "டேய் அப்பா நாளைக்கி வெளியே போறேன். புது புளுகன் ஒருத்தன் வருவான். அவன்கிட்ட பேசி அவனை இருக்க சொல்லு. அப்பா ஒரு இடத்துக்கு போயிட்டு வந்துடறேன்..!" ன்னு சொல்லி ஊருக்கு போயிட்டான்.
அப்போ அந்த நேரம் புதுப்புளுகன் வந்துட்டான். "என்னடா தம்பி.. அப்பா இல்லியா..?ன் னு கேட்டான்.
அதுக்கு குட்டி புளுகன் . "எங்க அப்பா சித்தெறும்பு தோலை உரிச்சு கிலோ 90 ரூபாய் க்கு விக்க போயிருக்கார்.." அப்டினு ஒரு பிட்டு போட்டான்.
இதை கேட்ட புது புளுகன் "இவனே இப்படி புளுகுறான். இவன் அப்பன் எப்படி புளுகுவானோ..?" 'ஆத்தாடி'ன்னு சொல்லி அலறி ஓடிட்டான்.
பெரும்புளுகன் வந்து "எங்கடா அந்த ஊர் புளுகன் வந்தானா..?"ன்னு கேட்டான். அதுக்கு குட்டி புளுகன் "அப்பா நீ சொல்லி குடுத்த புளுகுல ஒரு பிட்டு தான் போட்டேன். ஒடிப் போயிட்டான் அவன்..!"ன்னு சொன்னான்.
அவனை விட்டு விட்டாயே என்று கடுப்பான பெரும் புளுகன் இந்த குட்டி புளுகன அடிச்சி ஒரு கிணத்துல தூக்கி போட்டான். அப்போ அது வழியே வந்த பெண்கள் கிட்ட "அக்கா அம்மா யாராவது காப்பாத்துங்க..!" னு குட்டி புளுகன் அழுக அவங்களும் இரக்கப் பட்டு வாளி ஒன்னை உள்ள போட்டு தூக்கி விட்டார்கள்.
குட்டி புளுகன் வீட்டுக்கு போயி "அப்பா என்னப்பா பண்ற..?" னு கேட்டான். "அடேய் இப்போதாண்டா உன்ன கிணத்துல தூக்கி போட்டேன். எப்படி வந்தே..!"ன்னு கேட்டான்.
அதற்கு குட்டி புளுகன் " கொஞ்ச நேரம் முன்னாடி மழை பெஞ்சதுல்ல அந்த தூறல பிடிச்சு மேல ஏறி வந்தேன்பா" னு சொன்னான்.
பெரும் புளுகன் அரண்டு போயி "டே.. யப்பா உண்மையில் நீ பெரிய புளுகன் தாண்டா..!. என்னையே மிஞ்சிட்டே" ன்னு சொல்லி தன் கர்வத்தை விட்டுட்டு குட்டி புளுகனை கட்டி அணைத்தான்.

ளும்:

Comments

Popular posts from this blog

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!