உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

 அடடா...அப்படியா..!

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!  உதடு சொல்லத் துடிக்கும்..! உள்ளம் சொல்லாமல் துடிக்கும்..!!

சம்மட்டியின் கடைசி அடியில் தான் கல் உடைகிறது என்றால், முதல் அடி வீணானது என்று பொருள் அல்ல...!  வெற்றி என்பது  தொடர்  முயற்சியின்  விளைவே..!!

எல்லா  தானமும் பிறரை  வாழ வைக்கும்..!  நிதானம் மட்டுமே  தன்னையும் வாழ வைத்து,  பிறரையும் வாழ வைக்கும்..!

வாழ்க்கையை நாம் திரும்பி பார்க்கும் போது, விரும்பி பார்ப்பது போல்  நாம் ஏதாவது செய்திருக்க  வேண்டும்..!!

சொல்லும்,  செயலும்,  பொருந்தி வாழ்கின்ற  மனிதன், மட்டுமே உலகத்தில்  நிம்மதியாக  வாழ்கிறான்..!!

வாழ்க்கையில்  நமக்கு கிடைக்கும் சிறந்த  பரிசு எதுவென்றால்  பிறர் நம்மீது வைக்கும்  நம்பிக்கை தான்..!

வாழ்க்கையில் சிரிப்பவர்கள் அனைவரும் கவலைகள் இல்லாமல் வாழ்பவர்கள் இல்லை..! மாறாக கவலைகளை மறக்க கற்றுக் கொண்டவர்கள்..!!

கட்டடங்களுக்கு  நல்ல  அஸ்திவாரங்கள்  தேவை.!! கப்பல்களுக்கு கலங்கரை  விளக்கங்கள் தேவை.! வண்டிகளுக்கு  அச்சாணிகள் தேவை..!! அது போல  மனிதனுக்கு நிம்மதியும்  மகிழ்ச்சியும் கிடைப்பதற்கு   நல்ல உடல் நலன்  தேவை..!!

அளவாக உண்ணு:  அச்சமின்றி செயல்படு:  அமைதியாக தூங்கு:  ஆழமாக சுவாசி:   பணிவாகப் பேசு:  சுயமாக சிந்தி:  சரியாக நம்பு: நாகரிகமாக பழகு:   கண்ணியமாக உடுத்து:  உண்மையாக உழை.

பேசாதவர்களைப்  பற்றி  நினைப்பதை விட்டு விடுங்கள்பேசுபவர் களிடம்  சந்தோசமாக பேசி  பழகுங்கள்.  இதுவே தேவையில்லாத   மன அழுத்தத்தைக் குறைக்கும் வழி..!!

நல்லவனுக்கு கடவுள்  பயம்  அதிகம்..!!  கெட்டவனுக்கு கடவுள்  பக்தி அதிகம்..!!

உண்மையான மதிப்பு  தெரிஞ்சும், சில நேரங்களில் நாம்  தவற விட்டு விடுகிறோம்.  பொருளையும் சரி , மனிதனையும் சரி..!

வார்த்தை என்பது  ஏணி  போல..! நாம் பயன் படுத்துவதைப்  பொறுத்து  ஏற்றியும்  விடும்,   இறக்கியும் விடும்..!!

நேர்மையில்லாத  நட்பும்,  நம்பிக்கையில்லாத   வாழ்வும், என்றும்  நிரந்தரமில்லை..!!

நம் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால்,  நம் பயணங்களும் தடம்  மாறாமல் இருக்கும்.  நாம் சேரும் இடமும்   சிறப்பாக இருக்கும்..!!

நடந்ததெல்லாம் நன்மை  என்று கருதினால்,   நடக்கப் போவதும்  நன்மையாகவே முடியும்..!!

என்ன தான் ஆசை ஆசையாய் வீடு கட்டி   அதில் ஏசி பேன் ஏர்கூலருன்னு  விதவிதமாய் உள்ளே   வச்சு இருந்தாலும் மொட்டை   மாடியில் தூங்குற சுகத்துக்கு  ஈடாகாது எதுவும்..!!

சிலர் நடிக்கிறார்கள் எனத்  தெரிந்தும், தெரியாதது போல் நாமும் நடிப்பது    நமது  பக்குவத்தின்  உச்ச கட்டம்..!!

நமது வாழ்க்கையில் நமக்கு எல்லாம் தெரியும்  என்ற எண்ணம் வந்து விட்டால்,  வாழ்க்கை    வீழ்ச்சியடையத் தொடங்கி விடும்..!!

உலகில் ஒருவனுக்கு கிடைக்கும் உயர்ந்த  வரம்,  திருப்தியான  மனம் தான்..!!

எல்லாத்துக்கும்  பிடிச்ச மாதிரி  ஒரு மனிதன்  வாழணும்னா... அவன்  பணமாகத்தான் பிறந்திருக்க  வேண்டும்..!!

வாழ்க்கையில் மகிழ்ச்சி  என்பது பிறரை நேசிப்பதும் ,   பிறரால்  நேசிக்கப்  படுவதும் தான்..!!

கோபத்தை  உப்பு  போலப் பயன்படுத்த  வேண்டும்.   குறைந்தால் மரியாதை   இல்லாமல்  போய்  விடும்..!!   கூடினால் மதிப்பு  இல்லாமல் போய் விடும்..!!

பல  முறை முயற்சித்தும் தோல்விகள் தான் நமக்கு கிடைக்கிறது என்றால், நம் இலக்குகள் தவறானவை என்று பொருள்...!  சரியான இலக்கினைத் தேர்ந்தெடுத்து வெற்றியைப் பெறுவதே  சரியான வழியாகும்..!!

நமது வாழ்க்கையில் இது தேவையில்லை என்று நாம்  தூக்கி எரிந்தவைகளை தேடுவதும்,  தேவைப்படும் என்று சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை தொலைத்து விடுவதுமே   வாடிக்கையாக்கி  விட்டது...!!

கடினமான செயல்களின் சரியான பெயர் தான் சாதனை...!!  சாதனைகளின் தவறான விளக்கம் தான்  கடினம்...!!

ஒருவரின் தேவையைப்  பொறுத்தே உங்களுடன்  அவர்கள் உறவாடும்  நேரம் நிர்ணயிக்கப் படுகிறது..  தேவைகள் குறைய குறைய அவர்கள் உறவாடும் நேரமும் குறைந்து விடுகிறது ..!!

எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம்  இருந்தால் மட்டுமே   நீ   விலகி  நின்றாலும்  உன்னைத் தேடி வரும்..!!

கோயில் குளத்தில் விழும்   மழை தீர்த்தமாகிறது..  வீதியில் விழும் மழை சாக்கடையாகிறது.. அதேபோல, சேரும் இடத்தைப்  பொறுத்தே மனிதனின் நிலையும் அமைகிறது..!!

குறைகளைத் தன்னிடம்  தேடுபவன் தெளிவடைகிறான்..  குறைகளைப் பிறரிடம்   தேடுபவன் களங்கப்படுகிறான்.!!

கோபம் உதட்டில் இருக்க  வேண்டும்.   மனதில் இருக்கக்   கூடாது..!! அன்பு மனதில் இருக்க   வேண்டும்உதட்டில் இருக்கக் கூடாது..!!

நாலு பேர் உன்னை நல்லவன் என்று சொல்ல   வேண்டும் என்பதற்காக  நல்லது செய்யாதே..!!  நாலுபேர் நல்லா இருக்க  வேண்டும் என்பதற்காக   நல்லது செய்..!!

தெரிந்து கொண்டேன் என்பதை விடதெளிந்து விட்டேன் என்பதே, உண்மையான அனுபவம்..!.

அனுபவம் சில காயங்களை தந்து  விட்டுத் தான் மனிதனுக்கு நிதானத்தை கற்றுக்  கொடுக்கும்..!!

சுயநலத்துக்காக   பழகவும் கூடாது.. !!  பழகிய பின்   விலகவும் கூடாது..!!Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!