Posts

Showing posts from August, 2023

ஜோக் போல தோன்றினாலும் உண்மைநிலை இதுதான்....!!

Image
சுப்பையா பீட்சா சாப்பிட விரும்பி விரும்பி பீட்சா கடைக்கு போன் பண்ணுகிறார் கடை ஆள்: "ஹலோ.. இ து பீட்சா கடை" சுப்பையா: "என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?" கடை ஆள்: "ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?" சுப்பையா: "பீட்சா வாங்க இதையெல்லாமா கேட்பீங்க...? சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102 கடை ஆள்: "ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சுப்பையா.. நம்பர் 17 ராக்காச்சி தெரு, தாம்பரத்திலிருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு லேண்ட் லைன் நம்பர் 40942366, ஆஃபீஸ் லேண்ட் லைன் நம்பர் 26452302 மொபைல் நம்பர் 9542662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..!" சுப்பையா "வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி புட்டு புட்டு வைக்கிறீங்க.!"" கடை ஆள்: "நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டா இருக்கோம் சார்....!" சுப்பையா: "வெல்.. எனக்கு ஒரு இறால் பீட்சா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..? கடை ஆள்: "என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன்...!" சுப்பையா: [

சோற்றை விட உப்பிற்கே மரியாதை அதிகம்.

Image
அடடா...அப்படியா...!! சோற்றைவிட, உப்பிற்கே மரியாதை அதிகம். ஆனாலும் விரல் அளவிற்கு மேல் உப்பை சாப்பிட முடியாது. ஆடம்பரமும் அப்படித்தான்..!! அநியாயம் நடக்கும்போது அமைதியாய் இருப்பது அந்த அநியாயத்தை செய்ததற்கு சமமான து தான். ..!!! பிறப்பு பெற்றோரின் பரிசு.. கல்வி ஆசிரியரின் பரிசு.. வேலை ஒரு நிறுவனத்தின் பரிசு.. மனைவி வாழ்க்கையின் பரிசு.. ஆனால் நல்ல நண்பர்களோ கடவுளின் பரிசு.. ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து ..! மனநிறைவே மிகப்பெரிப புதையல்..! நம்பிக்கையே மிகச்சிறந்த நண்பன்..! கனவு பெரியதாக இருக்கும்போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்..! நாளை நாளை என்று ஒரு விசயத்தை தள்ளிப் போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்..!! எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை. தோல்வியைத் தழுவுகின்றனர் உங்கள் வாழ்க்கையை உயர்த்த உங்களைத் தவிர யாரால் முடியும்..? நீங்களாக விரும்பி உயராவிட்டால் உங்களை யாராலும் உயர்த்த முடியாது..!! ஒரு மன்னிப்பு இருவரை மனிதர்களாக்கு கிறது...!! தடைகள் குறுக்கிடும்போது உங்கள் இலக