Posts

Showing posts from September, 2023

வீரமங்கை வேலுநாச்சியார் ..!!

Image
  வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் பெண்மணியாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் ஜான்சிராணி பிறந்ததோ 1830. இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1730- இல் பிறந்தவர் வேலு நாச்சியார். ஜான்சிராணிக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண்மணி வேலுநாச்சியார்தான். வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது. இராமநாதபுரம் சேதுபதியான செல்லமுத்து தேவருக்கும், சிவகங்கை மாவட்டம் 'சக்கந்தி' முத்தாத்தாள் நாச்சியருக்கும் 1730- ஆ ம் ஆண்டு ஜனவரி மாதம் 3- ஆ ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலுநாச்சியார் என பெயரிட்டனர். ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார் . மகளுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாளல் போன்ற போர்க்களப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார் செல்லமுத்து சேதுபதி.. சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதரே தன் மகளுக்கு ஏற்ற மணாளர் என்பதை உணர்ந்து அவருக்கு 1746-ல் திருமணம் முடித்து வைத்தார். அப்போது வேலு நாச்சியாருக்கு வயது 16.

முத்துராமலிங்க தேவரின் முதல் பேச்சு.. ..!!

Image
  முத்துராமலிங்கத் தேவரின் முதல் மேடைப் பேச்சு நிகழ்ந்தது எப்படி..? முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் விவேகானந்தர் வாசகசாலை நடத்தி வந்தார். இவர் ஒரு தேசபக்தர் 1933 ஆம் ஆண்டில் ஒரு நாள்... இந்த வாசக சாலையின் ஆண்டு விழாவிற்கு சேதுராமன் செட்டியார் ஏற்பாடு செய்தார். இந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து வைக்க மதுரை கிருஷ்ணசாமி பாரதியையும் சிறப்பு விருந்தினராக காமராசரையும் கலந்து கொள்ள சேதுராமன் செட்டியார் ஏற்பாடு செய்திருந்தார் விழாவில் கிருஷ்ணசாமி பாரதியாரால் கலந்து கொள்ள இயலவில்லை எவரைக் கொண்டு விவேகானந்தர் படத்தை திறப்பது என்று சேதுராமன் செட்டியார் கலங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து கிராமத்திற்கு பஞ்சாயத்து நிமித்தமாக முத்துராமலிங்கம் வந்திருக்கும் செய்தி கிடைத்தது. அந்த கிராமத்திற்கு சென்று நிலைமையை விளக்கி விவேகானந்தர் படத்தை திறந்து வைக்க முத்துராமலிங்கத்தை சேதுராமன் செட்டியார் அழைத்து வந்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முத்துராமலிங்கம் விவேகானந்தர் படத்தை திறந்து வைத்து விவேகானந்தரின் தண்ணிகரில்லா தனித்தன்மைகளை மூன்று மணி நேரம் முழ

சித்திரகுப்தன் யார்..?

Image
  சூரிய பகவானின் அழகில் மயங்கிய அப்சரஸ் பெண்ணான நீளாதேவி அவனிடம் உள்ளத்தை பறி கொடுத்தாள். அவன் மேல் தீராத மோகம் கொண்டாள். அவளின் மனநிலையை அறிந்த சூரிய நாராயணன் அவள் முன் தோன்றி அவளின் வேண்டுகோளை ஏற்று அவளின் விருப்பத்திற்கு இணங்கினார். இதன் விளைவாக சித்திரை திங்களில் சித்திரை நட்சத்திரத்தில் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள் நீளாதேவி. சித்திரைத் திங்களில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவனுக்கு "சித்திரகுப்தன்" என்ற செல்ல ப் பெயரிட்டு அழைத்தனர். [ சித்’ என்றால் மனம் , ‘ அப்தம் ’ என்றால் மறைவு என்றும் பொருள். மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர் என்றும் கூறுவர்] வாலிப பருவம் அடையும் முன்பே அவன் கல்வி கேள்விகளிலும் சகல சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கினான். சூரிய நாராயணனின் செல்லக்குமாரன் என்பதால் அவனுக்கு சகல ஞானமும் சேர்ந்திருந்தது. எனவே உலகிலேயே முதல் தொழிலாக கருதப்படும் பிரம்மா செய்து வந்த படைத்தல் தொழிலை தானே செய்து வர ஆரம்பித்தான். சூரிய குமாரனின் மகன் என்பதால் சித்திரகுப்தனை தட்டி கேட்க பிரம்மாவுக

தமிழ்நாடு என்று பெயர் வைத்தது யார்..?

Image
  'கல்வி சிறந்த தமிழ்நாடு' 'புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று மகாகவி பாரதியும் பண்டைய நூல்களிலும் "தமிழ்நாடு" என்ற பெயர் காணப்பட்டாலும் அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை...! சென்னப்ப நாயக்கர் என்பாரை போற்றும் வகையில் "சென்னப்ப பட்டினம்" உருவானது. அதுவே பின்னர் சுருக்கமாக "சென்னை" என்றானது. மாநகர தலைமை பெற்று "சென்னை மாகாணம்"[ Madras Presidency ] என்ற பெயர் , அமைந்தது   நாடு விடுதலை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைந்த காலத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரோ குமாரசுவாமி ராஜாவோ ராஜாஜியோ சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றவில்லை. தொடர்ந்து காமராஜர் பகவத்சலம் போன்றோர் ஆட்சியிலும் சென்னை மாகாணம் என்ற பெயரே தொடர்ந்தது.   காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் ஒருமுறை விவாதத்திற்கு வந்தது. ஆனால் "நிர்வாகச் சிக்கல் ஏற்படும்.." என்று காரணம் காட்டி தீர்மானத்தை அமுல்படுத்த காமராஜர் விரும்பவில்லை...! இதனால் ஆத்திரமுற்ற காமராஜரின் உறவுக்காரரும் விருதுநகரை சேர்ந்த வருமான