Posts

Showing posts from October, 2023

தஞ்சை பெரிய கோயில் கட்டியது...!

Image
  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது... கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். 'ராஜ ராஜா!' என்றழைக்க... ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்... தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு...?" என்று கேட்டான் ஆனந்தமாக. இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார். ராஜ ராஜனின் கனவும் கலைந்தது. விழித்தெழுந்த ராஜ ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான். யாருக்கும்

கொசு ஏன் நம்மை கடிக்கிறது..?

Image
  உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் கொசு வகைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதில் பத்தில் ஒரு பங்காக 400 கொசு வகைகள் இந்தியாவில் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 200 வகையான கொசுக்கள் உள்ளன. ஆண் கொசுக்கள் ஒரு வாரமே உயிர் வாழக்கூடியன.பெண் கொசுக்கள் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை உயிருடன் இருக்கும். பெண் கொசுக்கள் ஒரு சமயத்தில் 100 முட்டைகளை இடுகின்றன. இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது என்பது ஆச்சர்யமான தகவல். இதனால்தான் கொசுக்கள் வேகவேகமாக பல்கி பெருகுகின்றன. ஒரு கொசுவால் தனது எடையை போல் இரண்டு மடங்கு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு பறக்க முடியும். ஒரே தடவையில் கொசு அதிகபட்சமாக பறக்கும் தூரம் இரண்டு கிலோமீட்டர் ஆகும் உயிரினங்களிலேயே குறைந்த நேரம் இல்லறவு உறவு கொள்பவை கொசு இனம்தான். ஒரு நொடியிலேயே இல்லற உறவை முடித்து விடுகின்றன . மனிதனைப் போன்றே ஆண் கொசுக்கள் சாதுவானவை. அவை சும்மா சத்தம் போடுவதோடு சரி. மேலும் இவை சுத்த சைவம். இவை தாவர சாற்றினையே உணவாக எடுத்துக் கொள்கின்றன. பெண் கொசுக்கள்தான் மனிதனை கடித்து இரத்தத்தை உறிஞ்சுக

விவேகம் உள்ளவன்தான் வெற்றி பெறுவான்.!!

Image
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் விசேஷமானதும், வீரியமிக்கதும், லீலைகள் பல அடங்கியதுமான கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணரின் செயல்கள் அனைத்தும் பல்வேறு முரண்பாடுகள் கொண்டதாக இருப்பதை பலரும் கவனித்திருப்பார்கள். அவற்றின் பின்னணியில் சூட்சுமமான தர்மம் அடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. கிருஷ்ணருடன் கடைசிவரை இருந்து அவருக்கு பல சேவைகளைச் செய்தவர் உத்தவர். அவர் கிருஷ்ணரின் சித்தப்பா மகன் ஆவார். கிருஷ்ணர், தன்னுடைய அவதார நோக்கம் முடிந்து பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்தது. அந்த நேரத்தில் தன்னுடனே இதுவரை பயணித்து வந்த உத்தவரிடம், “உனக்கு ஏதாவது விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்” என்று கூறினார். எளிய சுபாவம் கொண்ட உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கிருஷ்ணனின் பல லீலைகள், புரியாத புதிராகவே இருந்தது. அதனால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். “கிருஷ்ணா! உன்னிடம் சில கேள்விகள் மட்டுமே நான் கேட்க வேண்டும். அதற்கு விளக்கம் அளித்தாலே போதுமானது” என்றவர், தன்னுடைய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். “பாண்டவர்களின் உற்ற நண்பனாக இருந்த உன்னை, அவர்கள் பரிபூரணமாக நம்பினார்கள். நடக்கப் ப

கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது...!!

Image
  ஒரு உயர்நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டார். அவன் கையில் சாக்பீஸை கொடுத்து போர்டுல உனக்கு பிடித்த உறவு முறைகளில் 30 பேரை எழுது..!" என்றார் மாணவன் அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேரை எழுதினான் டீச்சர் பையனிடம் "கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும். யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி...!" என்றார். மாணவன் காதலி நண்பன் பக்கத்து வீட்டுக்காரர் இவர்களை பெயரை அழித்தான். டீச்சர் மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார். மாணவன் இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான். கடைசியாக அப்பா அம்மா மனைவி மகன் மகள் என இவர்களின் பெயர் மட்டும் இருந்தது. டீச்சர் "இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும். யாரை நீக்குவாய் ...?" என்றார். மாணவர்கள் அனைவருக்கும் கோபம்..!! மாணவன் வருத்தத்துடன் அப்பா அம்மா பெயரை அழித்தான். டீச்சர் மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,.. மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம்..!! யார் பெயரை அழிப்பான

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..!!

Image
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், "என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான். அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். "ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்!'' என்றான். மூத்தவன், "அதெப்படி முடியும்? ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது!'' என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர். வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, "இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு!'' என்று கூறி புதிரைச் சொன்னார். "முதல் புதிர்,

எதையும் சரியாக தேர்ந்தெடுக்கத் தவறினால் ...!!

Image
எதையும் சரியாக தேர்ந்தெடுக்க த் தவறினால், அனுசரிப்பதை தவிர வேறு வழி இல்லை விட்டுக் கொடுப்பதற்கும், விட்டு விலகுவதற்கும், பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. புரிந்து கொண்ட உள்ளமோ விட்டுக் கொடுக்கும்..!புரிந்து கொள்ளாத உள்ளம் விட்டு விலகி விடும்..! நிறைய துன்பங்களை சுமந்தாலும், புன்னகைக்க மறந்து விடாதீர்கள். ஒரு நாளிலே வாடிவிடும் பூக்கள் கூட அ ழு வதில்லை..!! ஒரு நல்ல மனிதரை எப்போதும் மிக மோசமாக நடத்தி விடாதீர்கள். ஏனெனில், ஒரு அழகான கண்ணாடி உடைந்துதான் மிக கூர்மையான ஆயுதம் உருவாகிறது உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டியிருப்பதை விட, ஒதுங்கி இருப்பதே நல்லது மதவெறி உள்ளவனுக்கு இறைபக்தி இருக்காது. இறை பக்தி உள்ளவனுக்கு மதவெறி இருக்காது. இறைவன் மதத்துக்குரியவர் அல்ல மனிதனுக்குரியவர் நேரத்துக்கு வயிறார சோறு. கடன் வாங்காத பண வரவு. அன்பான உறவு. கிழிசல் இல்லாம மாற்று உடைகள். மழை வெயிலில் ஒதுங்கிக் கொள்ள நல்ல இருப்பிடம். நேர்மையான ஒரு வழியில் உழைப்பு. நிம்மதியான இரவு தூக்கம். கண்ணீர் வரும் முன்னே துடைக்கும் அன்பு கரங்கள் இதை விடவா ஒரு வாழ்க்கை வேண்டும்..!! உலை அரிசிக்கு தெரிவதில்லை, அது உருமாறி பல