Posts

Showing posts from November, 2023

வியப்பான வேளாண் பழமொழிகள்- பகுதி-1

Image
மக் கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மூல த் தொழில் விவசாயம் ஆ கு ம் . உழவுத் தொழில் சிறப்பாக அமைந்தால் தான், மக்களின் வாழ்வு வளமையாக அமையும். உழவர்களின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ளவும், வேளாண்மை சார்ந்த நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும் பல்வேறு காலகட்டங்களில் நம் முன்னோர்கள் சொல்லிய பல்வேறு பழமொழிகள் துணை புரிகின்றன. 01.சீரைத் தேடின், ஏரைத் தேடு [ஒரு மனிதன் வசதியோடும், செல்வாக்கோடும், புகழோடும் வாழ விரும்பினால் அவன் விவசாய தொழிலைச் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்] 02.வாய் நிறைய காய் தின்றால் பாயில் விழ வேண்டாம்.!. நோயில் விழ வேண்டாம்..! [நமது உடல் நலத்தில் காய்கறிகளின் பங்கு மிகவும் முக்கியமான தாகும். உணவுடன் நிறைய காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய் நொடிகள் தாக்காது. ஆரோக்கியமாக வாழலாம்] 03.உழவன் கணக்கு பார்த்தால் உழக்கும் கூட மிஞ்சாது . [ஒரு விவசாயி வயலில் செய்யும் வேலையின் நேரத்தை கணக்கிட்டு அதற்கான கூலியை க் கணக்கிட்டு பார்த்தால் நட்டத்தை தவிர எதுவும் வராது என்பதே இதன் பொருள் ] 04.உழுகின்ற மாடு உள்ளுரிலே விலை போகும்” [நன்கு உ

சைக்கிள் ஓட்டுபவனால்,பொருளாதாரமே சீரழியும்.

Image
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால், இந்தியா மட்டுமல்ல உலகப் பொருளாதாரமே சீரழியும். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்..! ஆனால், தொடர்ந்து படித்தால் உண்மை விளங்கும்..! ஏன்னா, அவன் கார் வாங்க மாட்டான். அதற்காக கடனும் வாங்க மாட்டான். வட்டியும் கட்ட மாட்டான். பேங்க் மற்றும் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்கு கூட இவன் பிரயோஜனம் இல்லாதவன். கார், இன்சூரன்ஸ் பண்றதுக்கு வரமாட்டான். இந்த பெட்ரோல் டீசல் என்பதிலாவது அவனுக்கு செலவு வருமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை. இவனால் அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு கூட எந்த பிரயோஜனமும் இல்லை. சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்வது இல்லை. பார்க்கிங் கட்டணம் என்று பெருசா எதுவும் செலவழிக்க மாட்டான். இதெல்லாம் போய்த் தொலையட்டுமின்னு விட்டா, இவனுக்கு சுகர் வராது. இதய நோய் வராது. குண்டாகவும் மாட்டான். ஆஸ்பத்திரி, டாக்டர், மருந்துக் கடை இதெல்லாம் இவனுக்கு தேவையே இல்லை..! இப்போது புரிகிறதா..? ××××××××××× தியாகி ஆண் என்பவன், இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக் கொடுத்தலை, மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான். அவன் தன் இனி

எம்ஜிஆரால் கோடீஸ்வரரான தேவர்..!

Image
  1946 -கோயம்புத்தூரின் ராமநாதபுரம் என்ற இடத்தில் இருந்த "வீர மாருதி தேகப் பயிற்சி சாலை" யில் வியர்வையில் மின்னும் கருந்தேக்கு உடம்பில், ஒரு இளைஞர் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்தக் காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் கோவையில் திரைப்படங்களை தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தில் அந்த நடிகர், நம்பியார், எஸ்.வி.சுப்பையா போன்றோர் ஒப்பந்த ந டி க ர்களாக மாதச் சம்பளத்தில் நடித்து வந்தனர். அந்த நடிகர் அந்தத் தேகப் பயிற்சி சாலைக்கு அடிக்கடி வருவது வழக்கம். கருந்தேக்கு உடம்பு க் காரர் உடற் பயிற்சி செய்யும் போது அதை அந்த நடிகர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். காலப்போக்கில் இருவரும் நல்ல நண்பராகி விட்டார்கள். அந்த நடிகருக்கு கத்தி சண்டை தெரியும். கம்பு சண்டையில் பெரிய தேர்ச்சி இல்லை . கம்புச் சண்டையில் தேர்ந்தவரான கருந் தேக்கு உடம்புக்காரர் அதன் நுணுக்கங்களை அந்த நடிகருக்கு கற்றுத் தந்தார். அந்த நடிகர் 'தான் நடிக்கும்' படத்தில், தன்னோடு சண்டைக் காட்சியில் நடிக்க, கருந்தேக்கு உடம்புக் காரருக்கு சிபாரிசு செய்தார். ஒரு நாள், நடிகர் குடியிருந்த வாடகை வீட்டு

ஊசி போடப் போறேன் சாதாவா...? ஸ்பெஷலா..?

Image
  அவர்: "என்ன சார் நைட்ல ஒரே சத்தமா இருந்துச்சு...? இவர்: "வேற ஒன்னுமில்லேப்பா, என் பொண்டாட்டியத் தான் திட்டிக்கிட்டு இருந்தேன்.." அவர்: "அவங்கதான் ஊருக்குப் போயி ரெண்டு நாளாச்சே ...!" இவர்: "அதனாலதான் தைரி ய மா சத்தம் போட்டு திட்டிக்கிட்டு இருந்தேன்.." ______________________ அவர் : "மாமூல்"ங்குற வார்த்தையைக் கேட்டாலே உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது டாக்டர்..!" டாக்டர்: "இந்தப் பிரச்சினை இப்பத்தானா..? இல்ல மாமூலாவே இருக்கா..?" ___________________ கணவன்: "என்ன திடீர்னு என் சொந்தக்காரங்களை எல்லாம் வரச் சொல்ற..? மனைவி: "நாம புதுசா வாங்கி இருக்கிற நாய் கடிக்குமா என்ன்னனு தெரியலியே...அதுக்காகத்தான்..!! கணவன்: !!!!!????? ___________________ கணவனும் மனைவியும் ஒரு விருந்துக்கு போனார்கள் அங்கே... மனைவி : எனக்கு 58 வயது ஆகிவிட்டது. உங்கள் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து நான் கவர்ச்சிகரமாக இருப்பதாக சொல்கிறார்... கணவன்