Posts

Showing posts from December, 2023

வாய்ப்பு என்பது வடை மாதிரி..!

Image
வாய்ப்பு என்பது வடை மாதிரி..! நாம தான் காக்கா மாதிரி தேடி போய் தூக்கணும். பீட்சா மாதிரி வீடு தேடி வருமுன்னு காத்திருக்கக் கூடாது..!   பாசம் பலவீனமான ஆயுதம்..! ஆனால், பலமாக காயம் தந்து விடும்..! ஆசை, கோபம், பயம் இவற்றை எப்படி விடுவது என்று திகைக்க வேண்டாம். ஆசையை விட்டாலே கோபத்துக்கும், பயத்துக்கும் அவசியமில்லாது போய்விடும். [பகவத்கீதை] கழுகுடன் சேர்ந்து உயர உயர பறக்க விரும்பினால், குட்டையில் நீந்தித் திரியும் வாத்துகளுடனான தொடர்பை முதலில் விடுங்கள். ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் எப்போது உங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது..! ஒருவர் கடன் கேட்டால், தன் தேவை போக மீதி பணம் இருந்தால் கொடுப்பவன் நல்லவன்...! காசே இல்லாத போதும் அடுத்தவரிடம் கடன் வாங்கி கொடுப்பவன் இளிச்சவாயன்...! விழுந்து விடுவேன் என்று பயத்துடன் ஓடாமல், விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்று நம்பிக்கையுடன் ஓடுங்கள். வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது..! அழகுக்கும், நிறத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், ஒழுக்கத்துக்கும், வளர்ப்புக்கும் சம்பந்தம் உண்டு..! காலம் காரணம் இன்றி, யாரோட

வெற்றி பெறுவேனா..? என்று நினைக்காதே..!

Image
வெற்றி பெறுவேனா..? என்று நினைக்காதே..! நீ தனியாக போராடுவதே... வெற்றி தான்..! தோல்வியை கண்டு துவண்டு விடாதே..! இன்றைய சாதனையாளர்கள் அனைவரும், ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான்..! நேர்மையாளர்களுக்கு கோபம் அதிகம் வரும்..! பொறுமையாளர்களுக்கு இரக்கம் அதிகம் வரும்..! துரோகிகளுக்கு நடிப்பு நல்லா வரும்..! ஏமாற்றுக்காரர்களுக்கு பொய்யை கூட உண்மை போல் பேச வரும்..! ஒருவருடைய வாய்ப் பேச்சை காட்டிலும், அவரது மவுனம், அதிகமான கருத்துக்களை பிரதிபலிக்கும்..! என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல..! வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை..! நதிக்கு அழகு ஓடிக்கொண்டே இருப்பது..! செடிக்கு அழகு வளர்ந்து கொண்டே இருப்பது..! மனிதனுக்கு அழகு சாதனைகள் புரிந்து கொண்டே இருப்பது..! முகங்களைக் கண்டு அன்பு கண்டு காட்ட வேண்டாம்..! மனதினைக் கண்டு அன்பு காட்டுங்கள்..! முகத்தின் அழகு மாறிவிடக் கூடியது. மனதின் அழகு மாறுவது இல்லை..! மரத்தின் உச்சத்தில் பறவைகளைக் கூடு கட்ட மரங்கள் அனுமதிப்பது அதன் "எச்சத்தில்" வளா்ந்து நிற்கிறோம் என்கிற நன்றி கடனுக்காகத் தான்..!இது மரத்திற்கு புாிந்தது. சில மனித மண்டை

கஸ்மாலம்" என்றால் என்ன..?

Image
  கஸ்மாலம்" என்றால் என்ன..? ஒருவரை திட்டும்போது "போடா கஸ்மாலம்..!" என்று திட்டுவது சிலரது வழக்கம். இதன் பொருள் தான் என்ன..? "கஸ்மாலம்" என்றால் அசுத்தம், ஆபாசம், சீரிழப்பு, ஒழுக்கக்கேடு, மோசமானவன், மோசமான மனதைக் கொண்டிருப்பவன்; என்று பொருள்படும். சம்ஸ்கிருதத்தில் மனநோயை 'கச்மலம்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த "கச்மலம்" என்பதுதான் காலப் போக்கில் நாவில் புழங்கி புழங்கி "கஸ்மாலம்" என்றாகி விட்டது.பெரும்பாலும் சென்னை வாசிகளே ஒருவரைத் திட்டுவதற்கு இச்சொல்லை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரையில் "கஷ்மலம்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். கீழே படியுங்கள். குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம் அனார்ய ஜூஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்த்தி கரம் அர்ஜூன பொருள்: "அர்ஜுனா..! இது போன்ற களங்கங்கள் உன்னிடம் எங்கிருந்து வந்தன..? இவை அவமானத்தை கொடுப்பவை. வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதர்களுக்கு இவை தகுதியற்றவை. இவை மனிதரை மேல் உலகமான சொர்க்கத்திற்கு கொண்டு செல்வதில்லை...!" என்கிறார்

நான் செத்துப் பிழைச்சவன்டா..!!

Image
  கவிஞர் வாலி கூறுகிறார்: மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் 'எங்கள் தங்கம்' . கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவானது.. இதில் 'நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்று ஒரு பாடலை எழுதினேன். எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது. முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம். மாறன் வெளியே இருக்க, நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன். அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார். முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன். எம்.ஜி.ஆர். பாட்டைக் கேட்டு விட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது, என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார். 'வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

Image
  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23ஆம் தேதி தான் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சவுத்ரி சரண் சிங் 1979ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் பிரதமராக இருந்தவர். குறுகிய பதவிக் காலத்திலேயே, விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பல நலத் திட்டங்களை உருவாக்கினார். 2001ஆம் ஆண்டில், சவுத்ரி சரண் சிங்கின் பங்களிப்புக்காகவும்; ஒரு விவசாயி நாட்டின் பிரதமராக மாறியதை கவுரவிக்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 23-ஆம் தேதியை, "தேசிய விவசாயிகள் தினமாக"க் கொண்டாடுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதே நாளில் தான் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு வட்டாரம், துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அ.இராமையாத்தேவர் மகனாகிய இரா.சுருளிமலை ஆகிய நான் பிறந்தேன் என்பதோடு வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன் என்பது ஏதேச்சையான நிகழ்வாகும். உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், விவசாயி மற்றும் தொழிலாளியின் உழைப்பை போற

கடன் கொடுத்தவன் "பாவம்" பாா்த்தால்..!

Image
கடன் கொடுத்தவன் "பாவம்" பாா்த்தால், கடன் பெற்றவன் "லாபம்" பாா்ப்பான்...! வெல்ல வேண்டும் என்ற நினைப்பே, பல நேரங்களில் வெற்றியைத் தந்து விடுகிறது..! நாம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.காரணம், வார்த்தைகள் இதயத்தை புண்படுத்தவும், பழுது பார்க்கவும் செய்யும் ஆற்றல் கொண்டவை எவ்வளவு தூரம் கடந்து வந்தாலும், சிலவற்றை மறைக்கத்தான் முடிகிறது தவிர, மறக்க முடிவதில்லை மனிதனால் ..! எங்கேயும் பயணிக்காத போதும், எதையும் வாசிக்காத போதும், இந்த வாழ்க்கையின் மெல்லிய இசையை காது கொடுத்து கேட்காத போதும், உன்னையே நீ பாராட்டிக் கொள்ளாத போதும், கொஞ்சம் கொஞ்சமாக நீ சாக ஆரம்பிக்கிறாய்..! [பாப்லோ நெருடா] தோற்றால், இனி நான் வெல்ல முடியாது என்றாகி விடாது..! [சேகுவரா] தகுதிகள் சிறைப்பட்டு விட்டால், திறமைகளுக்கு மதிப்பு இருக்காது ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்திக் கொள்வதை விட, இது நமக்கான பாடம் என்று அதை அனுபவமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்..! மகிழ்ச்சி என்பது, தானாக வருவது அல்ல..! மாறாக, அது நம் செயல்களில் இருந்தே வருகிறது..! உங்களை புரிந்தவர்களுக்கு, நல்ல ப

மங்கலம், மங்களம் வேறுபாடு என்ன?

Image
மங்கலம், மங்களம் வேறுபாடு என்ன? இந்தக் குழப்பம் தமிழ் படித்த அனைவருக்கும் நெடுநாளாய் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் நாம் குழம்பிக் கொண்டிருக்கிறோம். இப்போது தெரிந்து கொள்வோம். மங்கலம் என்றால் மகிழ்ச்சி, புகழ், கீர்த்தி, புனிதம், தூய்மை, சிறப்பு, இனிமை, வாழ்த்து, வெற்றி என்று பொருள்படும். இதன் அடிப்படையில் ராஜ சி ங்க மங்கலம் [R.S. மங்கலம்] மன்னாடி மங்கலம், சதுர்வேதி மங்கலம் [S.V. மங்கலம்], சத்தியமங்கலம், குமாரமங்கலம் என்று அக்காலத்தில் அரசர்கள் அந்த ஊர்களுக்கு பெயர் சூட்டினர் "மங்கல நான்" என்பது "தாலியை" குறிக்கும். அமங்கலம் என்பது மங்கலத்திற்கு எதிரானது. அமங்கலி என்றால் மங்கலம் அல்லாத நிலையை அடைந்தவர்.அதாவது கணவன் இல்லாதவரைக் குறிக்கும் சொல். மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு". {குறள் 60}. "மங்களம்" என்றால் முடிவு, நிறைவு, இறுதியானது என்று அர்த்தம். தொடர்ந்து பெண் குழந்தைகளாக ஒரு வீட்டில் பிறந்து கொண்டிருந்தால், இனி இந்த வீட்டில் பெண் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்ய

தமிழக அரசின் சின்னம் வந்தது எப்படி..?

Image
  பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த நம் பாரத நாடு, நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் 1947 ஆம் வருடம் சுதந்திரம் பெற்றது. ஒரு நாட்டுக்கு சின்னமும் கொடியும் வேண்டுமல்லவா..? அதனால் மத்திய அரசு அசோக சின்னத்தை தனது சின்னமாக்கிக் கொண்டது. நேரு ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களுக்கானத் தனி முத்திரைகளை முடிவு செய்வது குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்திற்கான சின்னத்தை சூழ்நிலைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்தன. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். "மாநில அரசின் சின்னமாக எதை வைத்துக் கொள்வது..?" என்று சிந்தித்தார். ஒன்றும் புலப்படவில்லை. மற்ற மந்திரிகளுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தார். அவர்கள் "சின்னத்தை தேர்வு செய்வதற்காக ஒரு குழுவை அமைக்கலாம்..!" என்று பரிந்துரை செய்தனர். அப்படி செய்தால் காலம் தான் ஓடுமே தவிர, சின்னம் ஒன்றை எளிதில் தீர்மானிக்க முடியாது என்று மறுத்துவிட்டார் ரெட்டியார். ரெட்டியாருக்கு ஒரு எண்ணம் உதித்தது. ரசிகமணி டி கே சிதம்பரம் முதலியாரைப் பார்த்து

மனைவியிடம் பொய் சொல்லாதீர்கள்..!

Image
மனைவியிடம் பொய் சொல்லாதீர்கள்..! ஏனென்றால், அவர்கள் உண்மையை தெரிந்து வைத்துக் கொண்டு தான் கேள்வியே கேட்பார்கள்..! எதையும் நீ மருந்தாக எடுத்துக் கொண்டால் மனதுக்கு சுகமே வரும்..! விருந்தாக எடுத்துக் கொண்டால் விபரீதம் நிச்சயம் வரும்..! சேர்ப்பது மிகவும் கடினம். செலவு செய்வது எளிது. பணம் மட்டுமல்ல, உறவுகளும், நம் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணங்களும் கூடத்தான்..! ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள்..! நம் உள்ளத்திற்கு அழகு சேர்ப்பது நல்ல எண்ணங்கள்..! பணம் உலகத்தை கவரும்..! அழகு உள்ளத்தை கவரும்..! வார்த்தைகள் மனிதரைக் கவரும்..! இரக்கம் நிறைந்த ஒரு செயலானது இறைவனையே கவரும்..! வாழ்க்கையில் நமக்கு யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள்..! வாழ்க்கையே நமக்காக த் தான் இருக்கிறது என்று நினைத்து வாழுங்கள்..! எல்லாம் வெற்றி தான்..! வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. அதில் ஒன்றுதான், யார், யாரிடம் எப்படி பழகணும்,எந்த அளவுக்கு பழகணும், என்பது..! ஒன்றை வெல்வதற்கு, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போரிட வேண்டி இருக்கும்..! பணத்தால் வாங்கக்கூடிய விஷயங்களுக்கு பணத்தை செலவிடுங்கள்..! பணத