Posts

Showing posts from January, 2024

ஏமாற்றி சொத்து சேர்த்து வைக்கலாம்..! ஆனால்....

Image
ஏ மாற்றி சொத்து சேர்த்து வைக்கலாம்..! ஆனால், அதை அனுபவிக்க ஆ யு ளை அதிகரிக்க முடியாது..!! நடப்பது நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு கூட ஒரு தனி அழகு தான்..!! காயம் தந்தவர்களின் காரணங்கள் மேலும் காயம் ஆக்குமே தவிர ஆறாது பரவாயில்லை என்பதை காட்டிலும், பழகிவிட்டது என்ற வார்த்தைக்கு சற்றே வலி அதிகம் நமது வாழ்க்கையில் நமது வாய்ப் பேச்சுகளைக் காட்டிலும் மௌனங்கள் அதிகமான கருத்துக்களை வெளிப்படுத்தி, நம்மை யார் என்று மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறது..! மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது..! அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கிறது..! தயங்கிக் கொண்டே நிற்காதே..! ஒருமுறை முயற்சி செய்துவிடு..! வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்..! தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்..! முயன்றால் எதுவும் முடியும்..!! சிலருக்கு இலையாக இருப்பதும், சிலருக்கு கிளையாக இருப்பதும், சிலருக்கு மரமாக இருப்பதெல்லாம்.. அவரவர் நம்மை புரிந்து கொள்ளும் விதம் தான் தீர்மானிக்கிறது..!! கசப்பான நினைவுகள் காலம் முழுதும் கசப்பதில்லை..! நிகழ்வுகள் மாறும் போது, நினைவுகளும் இனிக்க

கண்ணதாசனின் வாழ்வியல் மொழிகள் - பகுதி-1

Image
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்..! அவன் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்..! யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது..!! நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்றவர்கள், வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்..!! நாம் விரும்பி பிறக்காதது போல, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல..!! யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே..! ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி இருக்கும்..!! கண்ணில் காணும் உலகத்தை விட, கற்பனை உலகம் சுகமானது. தங்கு தடை இல்லாமல் எங்கும் போக முடிகிறது .ஆனால், உள்ளம் காட்டுகிற இடமெல்லாம் நம் கைக்கு கிடைத்து விடுவதில்லை..! ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன்..! அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்..! உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..!! நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால் தான் அந்த இடத்தில் வேறு பயிர்களை பயிரிட முடியும். கொலை, களவு, சூது எல்லா

பாவத்தில் பங்கு..!!

Image
  ஒரு காட்டில் ஒரு மகரிஷி, தவத்தில் இருந்தார். பசி எடுக்கும் நேரம் கண்ணைத் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், அது என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, அங்கே வந்த பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். அவர் அதை அப்படியே வாயில் போட்டுக் கொள்வார். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வந்தான். அப்போது மகரிஷி இருந்த இடத்தை அடைந்தான். அன்று மகரிஷியை பார்க்க பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்டினார். அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டுக் கொண்டார். மன்னன் சிரித்தபடியே போய் விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்தவர் அவர். அவர் மன்னனிடம் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச் சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் சென்று சேர்ந்ததும் அதை உண்ண வைப்பார்கள்..!” என சொ

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை [விளக்கம் ÷3]

Image
  முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை பண்ணையார் பார்த்தசாரதியின் நிலத்திற்கு பக்கத்தில் பழனியாண்டியின் நிலம் இருந்தது. பண்ணையார் அந்நிலத்தில் கத்தரி வெண்டி தக்காளி மிளகாய் போன்ற பயிர்களை பயிரிட்டு இருந்தார். பழனியாண்டி தன் நிலத்தில் பூசணிக்காய் பயிரிட்டு இருந்தான். தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சியும், உரங்களை போட்டும், முறையாக பராமரித்தும், பண்ணையாரின் பயிர்களில் ஒரு செடி கூட பூ பூக்கவில்லை. பல செடிகள் துவண்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தன. பல செடிகள் வாடி கருகி விட்டிருந்தன. பழனி யாண்டியின் நிலத்திலோ சாம்பல் நிறத்தில் பூசணிக்காய்கள் பெரிது பெரிதாக காய்த்து நிலம் முழுவதும் பரவி க் கிடந்தன. அதைப் பார்த்த பண்ணையாருக்கு வயிறு பற்றி கொண்டு எரிந்தது. கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. எனினும், அந்த சாம்பல் நிறத்தில் நிலம் பூராவும் தெரிந்த அந்த பூசணி காய்களில் ஒன்றை சமைத்து உண்ண வேண்டும் என்ற ஆசை பண்ணையாருக்கு வந்தது. ஒரு நாள் பண்ணையார் தன் வயல் வரப்பின் மீது நின்று சுற்று முற்றும் பார்த்தார். எங்கும் ஆள் அரவமோ, மனிதர்கள் நடமாட்டமோ தெரியவில்லை. திடீரென பழனியாண்டி யின் நிலத்தில் இற

அவமானங்களை நினைத்து அழாதீர்கள்..!!

Image
அவமானங்களை நினைத்து அழாதீர்கள். உங்கள் அழகான வாழ்க்கைக்கு அடித்தளமே அந்த அவமானங்கள் தான்..! நடக்க பாதை இல்லைன்னு ஒரே இடத்தில நிக்கக்கூடாது. நடந்து நடந்து நாம தான் பாதையை உருவாக்கணும்..! தனியாக வாழ்வதின் பெரும் சோகம் என்னவெனில், தானே அழுது தானே துடைத்துக் கொள்வது தான்..! அவங்களா அதை அனுபவிக்காத வரை, நம்ம உணர்வு எல்லாம் அவங்களுக்கு விளையாட்டாத் தான் இருக்கும்..! விருந்தாளியாப் போன இடத்தில் ,அது இல்லையா இது இல்லையா என கேட்பது பெரிய அநாகரிகம்..! நன்றாகவும், நீண்ட காலமும், வாழ்வதற்குமான இரகசியம்: பாதி சாப்பிடவும். இருமுறை நடக்கவும். மும்மடங்கு சிரிக்கவும். அளவில்லாமல் நேசிக்கவும்..! [திபெத்திய பழமொழி] எந்த ஒரு சூழலிலும் "இதுதான் இறுதி" என்று எண்ணாமல், உறுதியுடன் இருங்கள் "இது ஆரம்பம்" என்று..! சத்தமாக வாசிக்க இயலாத கடந்த காலம் எனும் ஒரு பக்கம் எல்லோர் வாழ்விலும் இருந்து தான் தீரும்..! ஒரே ஒரு சொல் போதுமானதாய் இருக்கிறது உடைந்து அழவும், மீண்டு எழவும்...! இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள். உங்களிடம் யாசகம் பெறும் அளவிற்கு கடவுள் ஏழை இல்லை..! வெற்றியோ