கண்ணதாசனின் வாழ்வியல் மொழிகள் - பகுதி-1


குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்..! அவன் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்..! யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது..!!

நீ வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்றவர்கள், வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்..!!

நாம் விரும்பி பிறக்காதது போல, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல..!!

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே..! ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி இருக்கும்..!!

கண்ணில் காணும் உலகத்தை விட, கற்பனை உலகம் சுகமானது. தங்கு தடை இல்லாமல் எங்கும் போக முடிகிறது .ஆனால், உள்ளம் காட்டுகிற இடமெல்லாம் நம் கைக்கு கிடைத்து விடுவதில்லை..!

ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன்..! அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன்..!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்..!!

நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால் தான் அந்த இடத்தில் வேறு பயிர்களை பயிரிட முடியும். கொலை, களவு, சூது எல்லாம் செய்து விட்டு குமரா, முருகா என்று கூவினால், குமரன் நீ இருக்கும் கோவிலுக்கு கூட வர மாட்டான். இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல. அது எடையை சரியாகவே போடுகிறது..!

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். அதே போல, எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாக பழக வேண்டும்..!

பணம் இருப்போர் தவறு செய்தால் பாதுகாக்கும் சட்டமே,, நீ வலை வீசி பிடிப்பதெல்லாம் ஏழைகளை மட்டுமே..!

ஒரே கல்லை உடைத்து ஒரு பகுதியை சிலையாகவும், மறுபகுதியை கோவிலாகவும், படிக்கட்டுகளாகவும், உருவாக்குகிறோம். உள்ளே இருக்கும் சிலைக்கு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. படிக்கட்டாய் வெளியே கிடக்கும் பகுதி மனிதர்களின் கால் பட்டு தேய்கிறது. மனிதர்களுக்கும் இதைப் போலத்தான், அவன் இருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பும், மரியாதையும் நிர்ணயிக்கப்படுகிறது..!

ஒழுங்காக சம்பாதித்து பணக்காரன் ஆனவனும் குறைவு..! உண்மை பேசி பதவிக்கு வந்தவனும் குறைவு..!

சாக்கடை என்பது மோசமான பகுதி தான். ஆனால், அது இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடும்..!

அடைவதற்கு ஆசைப்படுபவன் இழப்பதற்கும் தயாராய் இருக்க வேண்டும்..!

தேவைக்காக கடன் வாங்கு. கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே..!

எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலேயே மாண்டு போகிறார்கள்..!

தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும், கிடைத்து விட்டால் மனிதனின் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தெரியும்..!

அழும் போது தனிமையில் அழு..! சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி...! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்..! தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்..!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..!1 வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..!!

ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிலை தான் வித்தியாசம்..! நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம்..! நம்மை தவிர ஏதுமில்லை என்று நினைத்தது ஆணவம்..!

அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்..! அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவை பெற முடியாது..!

"நான்" என்று நினைக்காதீர்கள்..! நினைத்தால், "தான்" என்பதை காட்டி விடுவான் ஆண்டவன்..!

எங்கே வாழ்க்கை தொடங்கும்..? அது எங்கே எவ்விதம் முடியும்..? இதுதான் பாதை, இதுதான் பயணம், என்பது யாருக்கும் தெரியாது..? பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்..! மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்..!

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி..! ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன்..!!

ஆசை, கோபம், களவு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம்..! அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது..!

உலகில் தப்பு என்று சில விஷயங்களை கூறுகிறோம். அதுவே, நிதானமாகவும் முறையாகவும் நடக்கும்போது அதுவே நியாயங்களாகி விடுகிறது..!

நிரந்தரமானது துன்பம். வந்து போவது இன்பம் "இதுதான் வாழ்க்கை" என்பதை தெளிவாக கண்டு கொண்டு விட வேண்டும்..!
++++++++++++

போர் தர்மம்
..................................
சூரியன் அஸ்தமம் ஆனபின் ஆயுதப் பிரயோகம் செய்யக்கூடாது
ஆயுதத்தை நழுவ விட்டவனைத் தாக்க கூடாது
சரணடைந்தவனை தாக்கக் கூடாது
புறமுதுகு காட்டி ஓடுபவனைத் தாக்கக் கூடாது
பெண்கள், குழந்தைகள், பசுக்கள், சாதுக்கள் ஆகியோரை போரின்போது துன்புறுத்தக் கூடாது
இத்தகைய போர் தர்மத்தை நாம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால் தான் கோரியும், கஜினியும், பாபரும், அவுரங்க சீப்பும் ராபர்ட் கிளைவும் ஆள முடிந்ததே தவிர வீரம் என்ற வெங்காயமெல்லாம் இல்லை.

பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்
........................................................................................................................................
01.பாயில் படுக்கையில் மனிதனின் மார்பு தசை தளர்ந்து விரியும்.
02.பாய் உடல் சூட்டை உள்வாங்க கூடியது.
03.திருமணமானவர்களுக்கு சீர்வரிசை கொடுக்கும் போது, பாய் இல்லாமல் வரிசை கிடையாது.
04.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.
05.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால் உடல் சூடு குறையும். மன அமைதியும், மன ஆரோக்கியமும் கிட்டும். ஞாபக சக்தியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!