ஏமாற்றி சொத்து சேர்த்து வைக்கலாம்..! ஆனால்....மாற்றி சொத்து சேர்த்து வைக்கலாம்..! ஆனால், அதை அனுபவிக்க ஆயுளை அதிகரிக்க முடியாது..!!


நடப்பது நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு கூட ஒரு தனி அழகு தான்..!!

காயம் தந்தவர்களின் காரணங்கள் மேலும் காயம் ஆக்குமே தவிர ஆறாது

பரவாயில்லை என்பதை காட்டிலும், பழகிவிட்டது என்ற வார்த்தைக்கு சற்றே வலி அதிகம்

நமது வாழ்க்கையில் நமது வாய்ப் பேச்சுகளைக் காட்டிலும் மௌனங்கள் அதிகமான கருத்துக்களை வெளிப்படுத்தி, நம்மை யார் என்று மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறது..!

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது..! அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறனே மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கிறது..!

தயங்கிக் கொண்டே நிற்காதே..! ஒருமுறை முயற்சி செய்துவிடு..! வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்..! தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள்..! முயன்றால் எதுவும் முடியும்..!!

சிலருக்கு இலையாக இருப்பதும், சிலருக்கு கிளையாக இருப்பதும், சிலருக்கு மரமாக இருப்பதெல்லாம்.. அவரவர் நம்மை புரிந்து கொள்ளும் விதம் தான் தீர்மானிக்கிறது..!!

கசப்பான நினைவுகள் காலம் முழுதும் கசப்பதில்லை..! நிகழ்வுகள் மாறும் போது, நினைவுகளும் இனிக்கும்..!!

ஏதோ ஒரு உறவில், அன்பான வார்த்தைக்காகவும், ஆறுதலுக்காகவும் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு மனிதனின் இதயமும்..!!

வாழ்க்கை ஒரு விசித்திரமான புத்தகம். நேற்றைய பக்கத்தை திருப்பிப் பார்க்கலாம்..! ஆனால் நாளைய பக்கத்தை புரட்டிக் கூட பார்க்க முடியாது..!

நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே... நம் வாழ்க்கையை அழகு படுத்தும். யாரோ கூறுகிறார்கள் என்று கண் மூடித்தனமாக காதைப் பொத்திக் கொண்டு மனம் யோசிக்காமலும் புரியாமலும் செய்யும் எந்த செயலும் "தற்காலிகமானதாக" மட்டுமே இருக்கும்.

எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் நம் பலவீனத்தை மட்டும்
வெளிப்படுத்தவே கூடாது..! நேரம் வந்தால் அவர்களும் நமக்கு எதிரியாக மாறக் கூடும்..!!

எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம், மூளையைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மனசையும், மனசைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மூளையையும், பயன்படுத்துறதும் தான்..!!

பொய்க்குத் தான் இந்த உலகத்தில் உறவுகள் அதிகம்..! உண்மைக்கு உறவுகளே மிக அரிது..!!

கண்டதையும் சிந்திக்காமல், கண்டதை மட்டும் சிந்தியுங்கள்..!!

ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், கண்ணுக்குத் தெரிய வேண்டியது இலக்கு மட்டுமே.. காரணங்கள் அல்ல..!!

வால் ஆட்டும் நாயுக்கும், ஜால்ரா போடும் வாயுக்கும் எதிரிகள் இருக்க வாய்ப்பே இல்லை..!!

தவறேதும் செய்யாமல் தன்மானத்தை சீண்டும் நிலை வந்தால் எங்கேயும் எவரையும் எதிர்த்து நில்லுங்கள்,.தப்பே இல்லை..!!

வாழ்க்கையும் ஓடுது..! நாமும் ஓடுகிறோம்..! கூடவே கஷ்டமும், கவலையும், சேர்ந்து ஓடி வருது..!!

சந்தோஷம் இருக்கும் இடத்தில் நீ வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கு. உன் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்..!!

உங்களின் திறமையை கூட பலர் திமிராக பார்க்கலாம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர உங்களின் திறமையை அல்ல

பத்து நடிகர்களின் படத்தை பரப்பி வைத்து , ஒரு குழந்தையிடம் காட்டினால் அந்தக் குழந்தை எம்ஜிஆர் படத்தைத் தான் எடுக்கும் ; காரணம் எம்ஜிஆரின் சிரிப்பில் உண்மை இருக்கும் ! [தமிழ்வாணன்]

துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதி அளிக்கும்..! அப்போது தான், எதைச் செய்ய வேண்டும்..? எதை செய்யக் கூடாது..? என்பதை நாம் கற்றுக் கொள்ள முடியும்..!!

உங்களை உணராத இடங்களில் ஒதுங்கிய நில்லுங்கள். அதுவே சிறந்தது..!

ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை, அவருக்கே விளக்கிச் சொல்வது மாதிரியான கொடுமை வேறு எதுவும் கிடையாது..!

பொறுமையாக காத்திருங்கள். கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் இங்கு நிறைய உண்டு..!

எல்லோருக்கும் பிடித்த மாதிரியும் வாழ முடியாது..! எல்லோருக்கும் பிடிக்கலைன்னா சாகவும் முடியாது..!!

தனது இயலாமையை ஏற்றுக்கொள்ள இயலாத போது, இயற்கையாக ஏற்படும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே விமர்சனம்..!!

வேலையும் பணமும் இல்லை என்றால் சரியானதை சொன்னாலும் அதை தவறாகவே எடுத்துக் கொள்ளும் இந்த உலகம்

ஒருவரை தன் இயல்பில் இருக்க விடாமல் இறுக்குபவர்கள் அவரின் வெறுப்பை தவிர பெரிதாக வேறு எதையும் பெற்று விடுவதில்லை

குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத ஒரு மனிதன் ஒருபோதும் உண்மையான குடும்பத் தலைவனாக இருக்க முடியாது

எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் முழுமையாக வாழ வில்லை என்றே அர்த்தம் [சேகுவாரா]

நீ ஒருவன் பின்வாங்குவதால், மற்ற அனைவரையும் காப்பாற்ற முடியும் என்றால் பின் வாங்குவதில் தவறில்லை..!

அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ, பொருளோ அல்ல. பாசத்துடன் ஒரு பார்வை..! அக்கறையுடன் ஒரு வார்த்தை..!

எதுவும் புரியாத போது தொடங்கும் வாழ்க்கை, எல்லாம் புரியும் போது முடிந்து விடுகிறது..!

தனக்கு பயன்பட்ட வரை அது உண்மையான அன்பு..! தனக்கு இனி பயன்படப் போவதில்லை எனும்போது அது போலியான அன்பு..! அவ்வளவுதான், அன்பின் வரையறை..!

விவரிக்க தெரியாமல் விவாதிப்பதால் தான் மனக்கசப்புகள் ஏற்பட்டு விடுகிறது

வாழ்க்கை சொர்க்கமாக ஆவதவற்கு பணம் மட்டும் காரணம் இல்லை என்கிறது உண்மைதான்..! ஆனால், வாழ்க்கை நரகமாக ஆவதற்கு பணம் இல்லை என்கிற ஒரு காரணம் மட்டும் போதும்..! [ஜெயகாந்தன்]

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!