அவமானங்களை நினைத்து அழாதீர்கள்..!!அவமானங்களை நினைத்து அழாதீர்கள். உங்கள் அழகான வாழ்க்கைக்கு அடித்தளமே அந்த அவமானங்கள் தான்..!

நடக்க பாதை இல்லைன்னு ஒரே இடத்தில நிக்கக்கூடாது. நடந்து நடந்து நாம தான் பாதையை உருவாக்கணும்..!

தனியாக வாழ்வதின் பெரும் சோகம் என்னவெனில், தானே அழுது தானே துடைத்துக் கொள்வது தான்..!

அவங்களா அதை அனுபவிக்காத வரை, நம்ம உணர்வு எல்லாம் அவங்களுக்கு விளையாட்டாத் தான் இருக்கும்..!

விருந்தாளியாப் போன இடத்தில் ,அது இல்லையா இது இல்லையா என கேட்பது பெரிய அநாகரிகம்..!

நன்றாகவும், நீண்ட காலமும், வாழ்வதற்குமான இரகசியம்: பாதி சாப்பிடவும். இருமுறை நடக்கவும். மும்மடங்கு சிரிக்கவும். அளவில்லாமல் நேசிக்கவும்..![திபெத்திய பழமொழி]

எந்த ஒரு சூழலிலும் "இதுதான் இறுதி" என்று எண்ணாமல், உறுதியுடன் இருங்கள் "இது ஆரம்பம்" என்று..!

சத்தமாக வாசிக்க இயலாத கடந்த காலம் எனும் ஒரு பக்கம் எல்லோர் வாழ்விலும் இருந்து தான் தீரும்..!

ஒரே ஒரு சொல் போதுமானதாய் இருக்கிறது உடைந்து அழவும், மீண்டு எழவும்...!

இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள். உங்களிடம் யாசகம் பெறும் அளவிற்கு கடவுள் ஏழை இல்லை..!

வெற்றியோ, தோல்வியோ முடிவு எதுவாயினும் முதலில் முயற்சி செய்..!

வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் கடந்து போகிறோம். ஆனால், ஒரு சிலரால் மட்டுமே நாம் கண்கலங்கி போகிறோம்..!

தேடிச் சென்று அன்பை நிரூபிக்க நினைக்காதே..! ஆசையாய் சென்றால் அவமானம் தான் மிஞ்சும்..!

மனிதனின் வலிமை இரண்டு விஷயங்களில் பயன்படாது. ஒன்று மரணம். மற்றொன்று காதல் [ஸ்பெயின் பழமொழி]

சந்தோசங்களை உருவாக்கிக் கொள்ள பணமோ பரிசோ தேவை இல்லை. சொற்களே போதும்..!

அனுபவங்கள் அதிகமானால் அமைதியாகி விடுகிறது மனசு..!

சண்டை போடாத உறவுகளை விட, எவ்வளவு சண்டை போட்டாலும் சிறிது நேரத்திலேயே அதை மறந்து அதைப் பற்றி தெரியாத மாதிரியே பேசும் உறவுகள் கிடைப்பது வரம்..!

தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட, மனதில் அதிகம் பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்..!!

உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட, உங்களால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சாலச் சிறந்தது..!

ஒருவனை ஏமாற்றியவன் அடையும் மகிழ்ச்சிக்கும், ஒருவனுக்கு உதவியவன் அடையும் மகிழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், முன்னது சீக்கிரம் மாறும். பின்னது அவனது சடலம் எரியும் நெருப்பிலும் பிரகாசிக்கும்...!

நீங்கள் கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள். ஒருவேளை இறங்குவதற்கு அதே படிகள் தேவைப்படலாம். விதி வலியது. காலம் கொடியது..

உங்களுடைய தவறுகள் மீண்டும் மீண்டும் தவறுகளாகவே தொடர்ந்தால், அது தவறே அல்ல. அது உங்களுடைய பழக்கம். அதை விட்டொழிப்பது தான் நல்லது..!

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்கும் அளவிற்கு இங்கு யாரும் பணக்காரர்கள் கிடையாது [ஆஸ்கார் ஒயில்ட்]

இசைக்கு நினைவுகளை தூண்டும் சக்தி உண்டு. சில சமயம், வலிக்கும் அளவுக்கு..!

இன்றைய உலகில் சரியாய் இருப்பவன் சங்கடத்தை அனுபவிக்கிறான்..! நரியாய் இருப்பவன் சந்தோஷத்தை அனுபவிக்கிறான்..!

பெண்ணின் மிகப்பெரிய பலவீனமே எதையும் எளிதில் நம்பி விடுவது தான்..!

அரிப்பு வந்தவன் சொரியாமல் இருக்க முடியாது. கழகத்துல சேர்ந்தவன் திருடாமல் இருக்க முடியாது..! [பெரியார்]

உண்மையாக இருக்கிறேன் என்று ஊமையாக இருந்து விடாதே..! மதிக்க மாட்டார்கள். மிதித்து விடுவார்கள்..!

வாழ்வில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுங்கள். ஆனால், யாருக்காக என்பதில் கவனமாக இருங்கள்..!

கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதில் தப்பில்லை..! மற்றவரை கஷ்டப்படுத்தி முன்னுக்கு வருவது தான் தப்பு..!

திட்டமிடல் இல்லாத வாழ்க்கை, மழைக் காலத்தில் உப்பு விற்கப் போன கதையாகவும், காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கப் போன கதையாகவும் மாறிப் போகும்..!

புதியதை வரவேற்பதில் தவறு இல்லை. இருப்பதின் மதிப்பை மறப்பது தான் தவறு..!

மௌனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்தவை. மௌனம் நிறைய பிரச்சினைகளை குறைத்து விடும்..! சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்..!

கடலளவு கஷ்டங்கள் இருந்தாலும் கையளவு தன்னம்பிக்கை இருந்தால் போதும்.. வாழ்க்கையில் எதையும் எதிர் கொள்ளலாம்..!!

"வெற்றியே வாழ்வின் மகிழ்ச்சி" என்ற எண்ணத்தை விட "மகிழ்ச்சியே வாழ்வின் வெற்றி" என்ற எண்ணமே சிறந்தது...!!

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால்  அது விசித்திரமாகிறது..!பலமுறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது  சரித்திரமாகிறது..!?

ஒரு விதை வளரும் போது சப்தமில்லாமல் வளர்கிறது.. ஆனால் அதே மரம் சாயும்போது பெரிய சப்தத்துடன் சாய்கிறது.. இதில் நாம் அறிய வேண்டியது படைப்பு அமைதியானது.. அழிவுக்கு இரைச்சல் உண்டுஇதுதான் மௌனத்தின் சக்தி.."அமைதியாக இரு" "மௌனம்  பழகு"

வாழ்க்கையும் கடினமில்லை..வாழ்வதும் கடினமில்லை..நம்மைச் சுற்றி இருப்பவர்களை சமாளிப்பது  என்பதுதான்  கடினம்..!!

கேள்வி என்னவென்று தெரியாது..ஆனால் பதில் எழுதியாக வேண்டும்... இதுதான் வாழ்க்கை..!!

செய்தால் தவறாகி விடும் என்று எதையும் செய்யாமல் இருப்பதுதான் தவறுகளிலேயே மிகப்பெரிய தவறு...!!

பெண்கள்  கவனத்திற்கு... அப்பாவிடம் குரவை உயர்த்திப் பேசாதீர்கள்.. அது அவருக்கு கோபத்தை உண்டாக்கும்..! அம்மாவிடம் குரவை தாழ்த்திப் பேசாதீர்கள்.. அது அவருக்கு பயத்தை உண்டாக்கும்..! கணவரிடம் பேசவே பேசாதீர்கள்.. அது அவருக்கு  ஆயுளை உண்டாக்கும்..!!Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!