Posts

Showing posts from February, 2024

இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!!

Image
  இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!! உன்னை தாழ்த்துபவர் முன் உயர்ந்து நில்..! உன்னை வாழ்த்துபவர் முன் பணிந்து நில்..!! அரிதாக கிடைத்தால் அதிசயமாக நினைப்பார்கள்..! அடிக்கடி கிடைத்தால் அலட்சியமாகத்தான் பார்ப்பார்கள் எதையுமே..!! மிகப்பெரிய வலியே, எந்த வலியும் இல்லாத மாதிரி வெளியில நடிக்கிறது தான்..!! நம்மள தேடாதவங்களை தேடிப் போவது தான் பெரிய தப்பு..!! விட்டுக் கொடுப்பவர்கள் விவாதம் செய்ய தெரியாதவர்கள் அல்ல..! விரும்பியவர்களின் மனம் விவாதத்தை விட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்..!! வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோசங்களாக..!! சிலவற்றை சங்கடங்களாக..!! அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கெஞ்சல், கொஞ்சல், இப்படி எல்லாவற்றையும் கலந்து தர வேண்டி இருக்கிறது. வெறும் அன்பு சலிப்பு தட்டி விடுகிறது [வண்ணதாசன்] அன்புக்காக இவ்வளவு நடிக்க வேண்டுமா..? வெறுப்பை பாருங்கள், பாசாங்கில்லாமல் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்று ..!! [மனுஷ்ய புத்திரன்] தண்ணீர் அமைதியாக இருக்கும் போது, அதில்

உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்..!!

Image
உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும். உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர்..! இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர்..!! உப்பை குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் அறிவுறுத்துகிறார்கள். அதனால், வாழ்க்கையில் நாம் அனைவரும் குறைக்க வேண்டிய சில உப்புக்கள் சில: கணவன்கள் படபடப்பு..! மனைவிகள் நச்சரிப்பு..! டீன் ஏஜ்கள் பரபரப்பு..! வாலிபர்கள் ஏய்ப்பு..! மாமியார்கள் சிடுசிடுப்பு..! மருமகள்கள் கடுகடுப்பு..! வக்கீல்கள் ஒத்திவைப்பு டாக்டர்கள் புறக்கணிப்பு ..! அரசியல்வாதிகள் ஆர்ப்பரிப்பு..! வயதானவர்கள் தொணதொணப்பு..! ஆனால் யாரும் குறைக்க தேவையில்லாத ஒரே உப்பு சிரிப்பு..! இது உடம்புக்கு மிகச் சிறப்பு..!! நிறைய தேடல்களுக்கு விடைக ளே கிடைப்பதில்லை..!! அன்பானவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லை என்பதை விட, அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் இல்லை என்பதே கசப்பான உண்மை..!! மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்..! ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள். மற்றொன்று, சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மாறுங்கள்..!! தகுதிகள் சிறைப்பட்டு விட்டால் திறமைகளுக்கு மதிப்பு இருக்காது..! ஒரு போதும் எவரிடமும் உன்னை பற்றி விளக்கம்

சிவனின் திருவிளையாடல்..!!

Image
வரகுணபாண்டியனின் ஆட்சிக்காலத்தில், வடநாட்டைச் சேர்ந்த ஹேமநாதன் என்ற யாழ் இசைக்கலைஞர் மதுரை வந்தார். அவரை வரவேற்ற வரகுணன், அவர் பல நாடுகளிலும் உள்ள யாழிசை விற்பன்னர்களை எல்லாம் வென்றவர் என்பதை அறிந்தார். தனது அரண்மனையில் தங்கிச் செல்ல கேட்டுக்கொண்டார். பாண்டியனின் உபசரிப்பால் மகிழ்ச்சியடைந்த ஹேமநாதனும் அதற்கு சம்மதித்தார்.ஹேமநாதன் இசையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்றாலும், அந்த திறமையே அவருக்கு அகந்தையையும் வளர்த்து விட்டிருந்தது. அவர் தன்னோடு வந்த சீடர்களை பாண்டிய நாடெங்கும் அனுப்பி, யாழ் வாசிக்கச் சொன்னார். அவர்களது இசை நாட்டு மக்களைக் கவர்ந்தது. ஹேமநாதனின் புகழ் எங்கும் பரவியது. இயற்கையிலேயே அகந்தை மிக்க ஹேமநாதனுக்கு, இந்தப் புகழ் மேலும் கண்ணை மறைத்தது. மன்னரைப் பார்க்க அரண்மனைக்கு வரும்போது கூட அலட்சியமாக நடந்து கொண்டார். அவரது செருக்கை அடக்க முடிவெடுத்தான் வரகுணபாண்டியன். அவ்வூரில் பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞர் இருந்தார். அவரை அழைத்த வரகுணன், "பாணபத்திரரே! இங்கே வந்துள்ள ஹேமநாதன் அகந்தை மிகுதியால் என்னையோ மற்ற கலைஞர்களையோ மதிப்பதில்லை. அவரது ஆணவத்தை அழிக்க நீரே தகுதியான ந

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்..!!

Image
  கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்..!! நண்பனுக்கு கடன் கொடுத்தால் ஒன்று நண்பனை இழப்பாய்..! இல்லையென்றால் பணத்தை இழப்பாய்..!! கண்ணீர் விடுவதால் கடன் அடையாது [யூத பழமொழி] கடன் வாங்கிப் பயிர் இட்டவனும், மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று...!! கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது..! கடன் நெஞ்சைக் கலக்கும்...!! கடன் பட்ட சோறு, கால் வயிறு நிரம்பாது..!! கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே.. கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே! கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான். கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்..! மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்..!! கடன் வாங்கிச் செலவு செய்தவனும், மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி..!! கடன் வாங்கியும் கல்யாணம் செய். கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரம ச் சாரி. நண்பனுக்கு கடன் கொடுத்தால் நட்பும் போய் விடும்..! பணமும் போய் விடும்..!! கடன் வாங்கி கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான். கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்..! கொடுத்த கடனை கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி எ

உன் ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்..!!

Image
  கண்ணதாசன் சொன்னவை..!! உன் ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால் உனக்கு எதிர்காலம்..! அதுவே ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுக்கு எதிர்காலம்..!! கற்றுத் தெளிவது கல்வி..! பட்டு தெளிவது அனுபவம்..! கற்றது மறந்தாலும், பட்டது மறக்காது..!! ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான். அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான். அவரவர் தேவைக்கு விலையைச் சொன்னான். அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான். பெண்களோ அழகை வாங்க வந்தார். ஆண்களோ ஆசையை வாங்க வந்தார். தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார். புலவர்கள் பொய்யை வாங்கிக் கொண்டார். குருடர்கள் பார்த்திட விழி கேட்டார். ஊமைகள் பேசிட மொழி கேட்டார். உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார். ஒரு சிலர் மேனிக்கு விலை கேட்டார். விலை என்னவென்றாலும் அவர் தந்தார். இதயம் என்பதை விலையாய் தந்து அன்பை வாங்கிட எவரும் இல்லை..!! குற்றங்கள் மூலம் நியாயங்களை சேகரியுங்கள்..! தவறுகள் மூலம் அனுபவங்களை சேகரியுங்கள்..! கர்மத்தின் மூலம் ஞானத்தை சேகரிங்கள்..! நண்பர்கள் மூலம் புத்தியை சேகரிங்கள்..!! நல்லவன் படகில் செல்லும் போது துடுப்பு தவறி தண்ணீரில் மூழ்கி விட்டால் நதியே திசை மாறி அவன் போகும் இடம் சென்று ச

புரோட்டாவை போலத்தான் இந்தக் காதலும்..!

Image
புரோட்டாவை போலத்தான் இந்தக் காதலும்..! அலாதியான சுவை மிக்கது ஆனால், அதீத ஆபத்தானது..!!   உண்மை இல்லாத இடத்தில், உரிமை கேட்பது தவறு..!! முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடு..! முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடு..!! துணிவு உங்களை உழைப்பில் உயர வைக்கும்..!! பணிவு உங்களை பிறர் மனதில் உயர வைக்கும்..!! உயரப் போகும் போது உதவும் உறவை விட, விழும்போது தாங்கும் உறவே சிறந்தது..! முடிவே இல்லாத போராட்டம் தான் இந்த வாழ்க்கை..! போராடாமல் வெற்றி பெறவே முடியாது..!! உரிமை உள்ள உறவும், உண்மை உள்ள அன்பும், நேர்மை உள்ள நட்பும், நம்பிக்கை உள்ள வாழ்வும் என்றும் விட்டுப் போவதுமில்லை..! தோற்றுப் போவதுமில்லை..! அன்பு என்பது நெல் மாதிரி.. போட்டால்தான் முளைக்கும்..! வம்பு என்பது புல் மாதிரி.. எதுவும் போடாமலேயே முளைக்கும்..!! நமது வாழ்வில் நாம் எடுத்த துணிவான முடிவுகள் மற்றும் மிகச்சிறந்த யோசனைகள் கூட, நாம் நன்கு செயல்படவில்லை என்றால் பயனற்றுப் போய்விடும்..!! யாரிடம் பேச வேண்டும் என்பது தெளிவு..! எதைப் பேச வேண்டும் என்பது அறிவு..! அதை எப்போது பேசவேண்டும் என்பது ஞானம்..!! அன்பானவர்கள