இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!!

 


இழந்தவனுக்கு மட்டும்தான் தெரியும் இழப்பின் வலி..!!

உன்னை தாழ்த்துபவர் முன் உயர்ந்து நில்..! உன்னை வாழ்த்துபவர் முன் பணிந்து நில்..!!

அரிதாக கிடைத்தால் அதிசயமாக நினைப்பார்கள்..! அடிக்கடி கிடைத்தால் அலட்சியமாகத்தான் பார்ப்பார்கள் எதையுமே..!!

மிகப்பெரிய வலியே, எந்த வலியும் இல்லாத மாதிரி வெளியில நடிக்கிறது தான்..!!

நம்மள தேடாதவங்களை தேடிப் போவது தான் பெரிய தப்பு..!!

விட்டுக் கொடுப்பவர்கள் விவாதம் செய்ய தெரியாதவர்கள் அல்ல..!விரும்பியவர்களின் மனம் விவாதத்தை விட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்..!!

வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது. சிலவற்றை சந்தோசங்களாக..!! சிலவற்றை சங்கடங்களாக..!!

அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கெஞ்சல், கொஞ்சல், இப்படி எல்லாவற்றையும் கலந்து தர வேண்டி இருக்கிறது. வெறும் அன்பு சலிப்பு தட்டி விடுகிறது [வண்ணதாசன்]

அன்புக்காக இவ்வளவு நடிக்க வேண்டுமா..? வெறுப்பை பாருங்கள், பாசாங்கில்லாமல் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்று ..!! [மனுஷ்ய புத்திரன்]

தண்ணீர் அமைதியாக இருக்கும் போது, அதில் உள்ள தூசிகள் தானாகவே அடியில் தங்கி விடும்..! அது போல, வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் போதும் அமைதியாக இருங்கள்.தானாகவே அடங்கி விடும்.!!

கேட்காமலே கிடைப்பதும், கேட்டவுடனே கிடைப்பதும், அதன் உண்மையான மதிப்பை பெறுவதில்லை

நம்மை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது, தோல்வியை வெல்லும் தகுதி நமக்கு இல்லாமலா போய்விடும்..?

பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால், வாழ்க்கை இனிக்கும் வார்த்தையை சிக்கனமாக பயன்படுத்தினால் உறவு நிலைக்கும்..!!

"யார் நமக்கு என்ன செய்தார்கள்..?" என்று யோசிப்பதை விட, "நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும்..?" என்று யோசிப்பது தான் உத்தமம்..!!

நல்ல விதை விதைத்தால் தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல பலனை கொடுக்கும்..! அதுபோல, நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் வாழ்க்கை பிரகாசிக்கும்..!!

அலட்சியமாக தூக்கி எறியப்பட்ட இடத்தில் துவண்டு போகாமல், பிறர் நம்மைப் புறக்கணிப்பதைக் கண்டு மனம் தளராமல்,நாம் செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக ஓடினால் மட்டுமல்ல, மெதுவாக நடந்தாலும் நாளைய நாளை உருவாக்க முடியும்..!

பொழப்பை மறந்து, நீ பொழுதைக் கழிக்காதே..! பிறரை எதிர்பார்க்கும் நிலை வரும். அது மன வருத்தத்தை உனக்கு அதிகம் தரும்..!!

எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ முடியாது என்பதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால் போதும், பல நேரங்களில் நம்மை நாமே கடக்க..!!

யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க முடியும் என்றால் நடித்துக் கொண்டுதான் இருக்க முடியும்..!!

யாரோ தவற விட்டதை, யாரோ பூர்த்தி செய்து கொண்டிருக்கும் செயலுக்குப் பெயர் தான் வாழ்க்கை..!!

நிம்மதியை தேடுவதை நிறுத்திய பிறகு தான் தெரிந்தது, எதையும் தேடி அலையாமல் சும்மா இருப்பது தான் நிம்மதி என்று..!!

மனதின் சமநிலைக்கு மௌனம் உதவுவது போல் வேறு எதுவும் சிறப்பாக உதவிடாது..!!

உலகிலேயே மிக எளிதானது பிறரிடம் குறை காண்பது..! உலகிலேயே மிக கடினமானது தன் குறையை தானே உணர்வது..!!

குறி தவறினாலும், முயற்சியானது அடுத்த வெற்றிக்கான பயிற்சியாகும்..!!

அழகு என்பது நிறத்தில் இல்லை. யார் மனதையும் காயப்படுத்தாமல் சிரிக்கும் குணத்தில் உள்ளது..!!

கூட்டத்தில் நிற்பது எளிது. தனியாக நிற்கத் தான் தைரியம் வேண்டும்..!!

யாரையும் நம்பி, யாருக்காகவும், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்..! இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கிவிட்டு அவர்கள் ஒன்றாகி விடுவார்கள்..!!

மற்றவர் தவறை கவனித்துக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் தவறை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்..!!

மன குழப்பம் இருக்கும்போது மௌனமாக இருங்கள்..! மன கஷ்டம் இருக்கும்போது தைரியமாக இருங்கள்..!!

உங்களின் மௌனம் யாரை பாதிக்கவில்லையோ, அவர்கள் உங்களிடம் பொய்யாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்..!!

பழகும் உறவுகள் அடித்தால் வலிக்காது. நடித்தால் வலிக்கும்..!!

வளைவுகள் இல்லாத பாதையும் இல்லை..! கவலைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை..!!

ஒருவர் வலியை, மற்றொருவரால் அதே அடர்த்தியில் அனுபவித்திடவே முடியாது..!!

வாழ்க்கை 'டீ ' யில முக்குன பிஸ்கட் மாதிரி..! எதுக்கும் தாமதிக்க கூடாது..! நட்டம் நமக்குத்தான்..!!

ஒருவர் இறந்தபின் பிணமோடு பிணமாக இருப்பதை விட அவர் உயிரோடு இருக்கும்போது மனிதனாய் நிற்பது சிறந்தது

ஒரு பக்கத்தில் எழுத வேண்டிய உனது கவலைகளை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து உன் வாழ்க்கை புத்தகம் முழுதும் நிரப்பி விடாதே

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வைக்க வேண்டும் இல்லையேல் வார்த்தையும் வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்

எல்லா உணர்ச்சிகளும்:

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!