கடந்து போவது, கற்றுத் தராமல் போகாது..!!

 கடந்து போவது, கற்றுத் தராமல் போகாது..!!

வாழ்க்கையும் ஒருவகை கனவு தான்..! உண்மை தெரிவதற்குள் உன்னை ரசித்துக் கொள்..!!

கடினமான காலகட்டம் தான், வலுவான மனிதர்களை உருவாக்கும்

கசப்பா இருந்தாலும் இதுதான் உண்மை..! நீங்க நல்லா இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்க நிறையப் பேர் விரும்புவது இல்லை..!!

எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் "என்னால் முடியும்.."!

கேள்வி தெரியாத போதும், பதில் தேடி அலைவது தான் வாழ்க்கை..!!

மாற்றம் வேண்டும் என்றால் முயற்சியை மாற்று அல்லது முயற்சியை கூட்டு. முடிவு தானாக மாறும்..!!

கோபமே படாவிட்டால் நமக்கே மரியாதை இல்லை..!!

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..! உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..!!

ஒரு அளவிற்கு மேல் யாரிடமாவது நாம் இறங்கி போகிறோம் என்றால், நம் மதிப்பை நாமே இழக்கிறோம் என்றே அர்த்தம்..!!

திறமையை என்றுமே வெளிப்படுத்த தயங்காதிர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை வெளிப்படுகிறதோ அதைப் பொறுத்தே உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும்

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவும் இல்லை..! போகும் பாதையில் கற்றுக் கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன..!!

ஒரு மனிதன் தன்னை புத்திசாலி என்று கூறிக் கொள்வதை நிறுத்தும் போது வெற்றி பெறுகிறான்

எல்லா அழுகைகளும் ஒரே அர்த்தத்தை கொண்டதில்லை..! எல்லா சிரிப்புகளும் ஒரே நோக்கத்தை கொண்டதில்லை..!1

அறிவை விட கற்பனை முக்கியமானது..! அறிவுக்கு எல்லை உண்டு. ஆனால், கற்பனைகளுக்கு எல்லையே கிடையாது..!!

விட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தால் உன்னை எட்டி உதைப்பதை ஒருபோதும் நிறுத்தவே மாட்டார்கள்..!!

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் உன்னை இழிவாக நினைப்பவர்களையும், உன்னிடம் என்றுமே குறை காண்பவர்களையும், உன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விடு..!

நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பிறரது பிரச்சினை..! அது ஒருபோதும் நம் பிரச்சினை ஆகி விடக்கூடாது..!!

யார் ஒருவர் பிறரை குறை கூறிக் கொண்டே இருக்கிறாரோ, அவரிடமே அத்தனை குறைகளும் இருக்கும்..!!

உன்னை வீழ்த்த நினைப்பவன் பயன்படுத்தும் ஆயும் உன் மனதை சிதைப்பது..!! நீ உன் மனதில் தெளிவாக இருந்தால் உன்னை வீழ்த்த யாராலும் முடியாது..!!

ராஜாவின் நாய் இறந்ததற்கு மந்திரிகள் கதறி கதறி அழுதனராம். ஆனால், அந்த ராஜா இந்த போது ஒரு மந்திரி கூட ஒரு துளி கண்ணீர் விடலையாம் ..!! [சீனப் பழமொழி]

அடுத்தவனின் பிடிவாதத்தை "திமிரு" எனவும், நம் பிடிவாதத்தை "மன உறுதி" எனவும் பழக்கப்படுத்தி வைத்துள்ளது நம் மனது..!!

உங்களது கனவுகளை நனவாக்கத் தவறினால், பிறர் அவர்களது கனவுகளை நனவாக்க உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள்..!!

மிகச் சிறந்த அறியாமை என்னவெனில் "நமக்கு பிடிச்ச மாதிரியே நாம இல்லாத போது" "நமக்கு பிடிச்ச மாதிரி அடுத்தவங்க இருக்கணும்.."னு எதிர்பார்ப்பது தான்..!!

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!

புரிதல் நிறைந்த உறவு, எளிதில் பிரியாது..! பிரிக்கவும் முடியாது..!!

நமக்கு பிடித்தவர்கள் பலர் இருக்கலாம். பிடிக்காதவர்களும் பல இருக்கலாம். ஆனால், புரிந்தவர்கள் ஒரு சிலர மட்டுமே இருப்பார்கள்..!!

"ஒரு நாள் விடியும் .." என காத்திருக்காமல் "இன்றே முடியும்" என முயற்சி செய். வேதனைகளும் சாதனைகளாக மாறலாம்..!!

காரணத்தோடு யாரையும் விரும்பாதே..! காரணம் இல்லாமல் யாரையும் வெறுக்காதே..! இரண்டுமே உன்னை காயப்படுத்தும்...!!

உயிருக்கு அடுத்தபடியாக, ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக்கூடிய ஒப்பற்ற பரிசு நம்பிக்கைதான்..!!

தேடப்படாதவராகி போவதன் வசதி, அதிகமாக சுய தேடலை நிகழ்த்துவதுதான்..!!

உழைப்பு உண்மையாக இருந்தால் உயர்வு தானே வரும்..!!

நீயா..? நானா..? எழும்போது அழிவு அதிகமாகும்..! நீயும் நானும் எனும்போது அன்பு அதிகமாகும்..!!

இருமனதாய் செயல்பட்ட எந்த காரியமும் வெற்றி அடைந்ததில்லை..! முழு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் தோல்வி அடைந்ததில்லை..!!

சில பிரச்சினைகளை நாம் நேராக எதிர்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை..! நாம் ஒதுங்கி சென்றாலே சில சமயம், அவை தானாக விலகிச் சென்று விடும்..!!

அமைதியாக விலகுவது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்..!!

எதிர் பார்ப்பதை விட எதிர் கொள்வதை ஏற்றுக் கொள்ளுங்கள்..! இங்கு எதிர் பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை..! எதிர் கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது..!!

நம்மை புரிந்து கொள்கிறவர்கள் நம்மை கொஞ்சம் அடிமைப்படுத்தி விடுகிறார்கள்..!1

உடன் பிறந்தவர்களின் உண்மையான பாசமும், அன்பும் சொத்துக்கள் பிரிக்கும் போது தெரியவரும்..!!

"எனக்குத் தெரியாது..?" என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை..!!

இருந்தால் உறவு..! பிரிந்தால் நினைவு..! அவ்வளவுதான் வாழ்க்கை..!!

உன்னை நம்பியவர்களுக்கு உயிராய் இரு: உன்னை வெறுப்பவர்களுக்கு உதாரணமாய் இரு..!!

வாழ்க்கையில் வலிகள் உண்டு. அதே சமயம், பல வழிகளும் உண்டு..! ஆகவே, தன்னம்பிக்கையுடன் தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்..!!


காலம் எந்த காயத்தையும் ஆற்றுவது இல்லை..! அது, நம் மனதை பக்குவப்படுத்துகிறது அவ்வளவுதான்..!!


நம்மை கோபப்படுத்துவது அவர்கள் வேலை என்றால், அவர்களை அலட்சியப்படுத்துவது நமது வேலையாக இருக்கட்டும்..!!


எப்படி வாழணும் என்பதையும்,, இப்படித்தான் வாழணும் என்பதையும் தீர்மானிப்பது பணம் அல்ல, மனம்..!!


வார்த்தைகள் பலம் மிகுந்த ஆயுதம். தாக்குவதற்கு பயன்படுத்தாதே..! தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்து..!!

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!