வலி இருந்தும் வேறு வழியின்றி சிரிப்பவர்கள் ஏராளம்..!!

 


வலி இருந்தும் வேறு வழியின்றி சிரிப்பவர்கள் ஏராளம்..!!

பாதைகள் எப்போதும் வெற்றியை தீர்மானிப்பதில்லை..! அங்கே நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்..!!

நீ உன்னை பலவீன மிக்கவராக உணர காரணம், நீ உன் பலவீனத்தை பற்றி மட்டும் சிந்திப்பதுதான்..! மாறாக, உன் வலிமையை மட்டும் சிந்தித்தால் நீ வலிமை மிக்கவனாக மாறுவாய்..!!

இல்லமோ, உள்ளமோ கண்டதையும் நிரப்பினால் இடைஞ்சல் தான்..!!

தன்னுடைய தவறை தாமாகவே ஒருவன் ஒப்புக்கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அவனை விட உண்மையானவன் யாரும் இருக்க முடியாது..!!

நமக்கு பிடித்ததை தான் நாம் செய்ய வேண்டுமே தவிர, அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்கக் கூடாது..!!

பொறுமையாய் இருப்பதற்குத்தான் தைரியம் வேண்டும். கோபம் என்பது தெருநாய்க்கு கூட வரும்..!!

"பணம் தான் வாழ்க்கை." என்று சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தை பின்னாளில் தாய் தந்தையரை அனாதை இல்லத்தில் சேர்ப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்..? பாசம் தான் பெரிது என்று சொல்லி வளர்க்கவில்லையே..?

இலக்கு நோக்கிய பயணத்தின் போது நம்மை நோக்கி குரைக்கிற ஒவ்வொரு நாய் மீதும் கல்லெறிய நின்றால், நாம் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது..!! [வின்ஸ்டன் சர்ச்சில்]

லட்சியம் இல்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது.அது நின்றாலும் பலன் இல்லை, ஓடினாலும் பலன் இல்லை..!!

தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ, அவனே உண்மையில் சிறந்த மனிதன்..!!

முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு, அறிவு அவசியம் இல்லை நல்லவனாகவே இருந்தால் போதும்..!!

உன் கால்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் உனக்கு மதிப்பு. ஒதுங்கி உட்கார்ந்து விட்டால் அதன் பின் தான் தொடர்கிறது உனக்கு அவமதிப்பு..!!

பேசுவதற்காக காத்திருப்பதும், பேசும்போது சண்டையிடுவதும்,
சண்டை போடவே பேசுவதும், சண்டை போட்டாவது பேசுவோமே என ஏங்குவது தான் உண்மையான அன்பு..!!

கம்பீரம் என்பது உண்மைக்கே உரித்தானது..!!

எதுவரை சென்றோம் என்பது முக்கியமில்லை..! எதை நோக்கி, எதற்காக சென்றோம் என்பதை முக்கியம்..!!

நீ எதை தேடிக் கொண்டிருக்கிறாயோ, அதுவும் உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் அது நிச்சயம் உன்னை வந்தடையும் .அதன் பெயர் தான் நம்பிக்கை..!!

வெற்றி தள்ளிப் போகலாம். ஆனால், முயற்சி வீண் போகாது..!!

நீ இந்த நொடியில் எப்படி வாழ்கிறாய் என்பதே அடுத்த நொடியும் எப்படி வாழப் போகிறாய் என்பதை தீர்மானிக்கிறது [இறையன்பு]

எல்லாம் கற்றுக் கொண்டு விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாதே..! உன்னை சோதிக்க தினமும் புதுப்புது உத்திகளை கையாளும் இந்த உலகம்..!!

ஆசையும், பசியும், பணமும் இல்லாவிட்டால் மனிதன் மனிதனாகவே இருந்திருப்பான்..!!

கை மீறி செல்லும் எந்த விஷயத்தையும் கையாளவே முடியாது..!!

பெரும் கனவு, அயராத உழைப்பு, குறைவான எதிர்பார்ப்பு, இவையே வெற்றியின் சூத்திரம்..!!

விமர்சனங்களை கடந்து செல். ஏனென்றால், தெரு நாயின் எல்லை, தெரு முடியும் வரை வரை தான்..!!

தனி ஒருவனிடம் திருடுவதை திருடன் தீர்மானிக்கிறான்..! அனைவரிடமும் திருடும் திருடர்களை மக்கள் தீர்மானிக்கிறார்கள்..!!

நீங்கள் மற்றவர்களிடம் பேசினால் யாருக்கு கோபம் வருகிறதோ அவர்களை ஒருபோதும் இழந்து விடாதீர்கள் அவர்கள் கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய வரம்..!!

விழுந்து எழு..! அப்போதுதான் "நீ கீழே விழக் காத்திருந்தவன் யார்..?" "உன்னைத் தூக்கி விடக் கை கொடுப்பவன் யார்..?" என்று உனக்கு தெரியும்..!!

மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும், யாரால் உணர முடிகிறதோ அவர்களே நமக்கு கிடைத்த உன்னதமான உணர்வு..!!

யார் விலகினாலும் நம் இயல்பு மாறாத வரை நமக்கு இழப்பு இல்லை..!!

முயற்சி என்பது ஆர்வத்தின் நேரடி பிரதிபலிப்பு..! முயலாமை என்பது சோம்பலின் அன்பளிப்பு..! முயன்று தோற்றால் அனுபவம் ..! முயலாமல் தோற்றால் அவமானம்..!!

புத்திசாலியாய் இருந்தாலும், சில இடங்களில் முட்டாளாய் நடி. வாழ்க்கை நிறையக் கற்றுக் கொடுக்கும்..!!

உன்னை ஒருவர் பிடிக்கும் என்று சொல்லி விட்டால் வாழ்க்கை முழுதும் பிடிக்கும் என்று நினைத்து விடாதே..! இன்று பிடிப்பவர்களுக்கு, நாளை பிடிக்காமலும் போகலாம்..!!

புரிதல் இல்லாமல் கற்றுக்கொண்ட எதுவும் எந்த பயனும் தராது..!!

உன்னை உண்மையாக நேசிப்பவர்கள் உன்னை பிரியும் போது கஷ்டத்தில் அழுவார்கள்..!! உன்னை பொய்யாக நேசிப்பவர்கள் நீ கஷ்டத்தில் அழும்போது உன்னை விட்டு பிரிவார்கள்..!!

நடக்காது என தெரிந்தாலும், கிடைக்காது என தெரிந்தாலும், மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதே இல்லை..!!

பிறரை மதிப்பதில் இருக்கிறது உனக்கான மதிப்பு..!!

கடந்து போ...! இல்லை கண்டுக்காம போ..! அவ்வளவுதான் வாழ்க்கை..!!

அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும். உன்னிடம் நம்பிக்கையும் பொறுமைபும் இருந்தால்..!!

பார்க்கின்ற அனைத்தையும் மனதிற்கு கொண்டு செல்லவும் கூடாது. மனதில் நினைப்பது அனைத்தையும் பேசிவிடவும் கூடாது. இரண்டுமே, பிரச்சினை தான்..!!

லாபம் ஞானத்தையும், நஷ்டம் பாடத்தையும் புகட்டும் [அதானி]

தன்னம்பிக்கை என்னும் செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும் படிகளில் ஏறி மரியாதை என்னும் மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்..!!

நிராகரிப்பு எவ்வளவு பெரிய வலி, அவமானம் என்பது மற்றவர்கள் நம்மை நிராகரிக்கும் போது தான் தெரியவரும்..!!

கோபத்தை காட்டிக் கூட ஒருவரை காயப்படுத்தி விடு. ஆனால், அன்பை காட்டி மட்டும் ஒருவரை ஏமாற்றி விடாதே..!!

மனம் விரும்பியவரிடம் மட்டுமே சண்டை இடுவதும், இறங்கிப் போவதும் சிலரின் குணம்..!!

பிடித்த பெண்ணிடம் மட்டுமே பொறுமையாக இருப்பது ஆணின் குணம்..! பிடித்த ஆணிடம் மட்டுமே சண்டை போடுவது பெண்ணின் குணம்..!!

வெற்றியடைய சிறந்த வழி மற்றவர் பார்வையில் முட்டாளாக தெரிய வேண்டும். ஆனால், உண்மையில் புத்திசாலியாக இருக்க வேண்டும்..!!

எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், துரோகி முன்னாடி கெத்தா வாழ்ந்து காட்டணும்..!!

நம்மை விட்டு யாராவது பிரியும் போது நமக்கு வலித்தால் அதில்
அவர்கள் காட்டிய பாசம் தெரியும்..!! அப்படி நமக்கு வலிக்கவில்லை என்றால் அந்த உறவின் வேஷம் தான் காரணமா இருக்கும்..!!

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல அதற்குப் பெயர் துரோகம்..!!

இங்கு பலர் பிறர் செயலை பிழையென காட்டிவிட்டு, தம் செயலை சரியென காட்டிக் கொள்கின்றனர்..!!

இசைக்கு நினைவுகளை தூண்டும் சக்தி உண்டு. சில சமயம், வலிக்கும் அளவிற்கு..!!

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டும் என்றால் உன்னை நேசி..!! சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி..!!

நம்பியது இழந்த பிறகு, நம்பிக்கையும் இழந்து விடுகிறது.!!

விரும்பியது "தகரம்" என்றால் அருகில் "வைரமே" இருந்தாலும் மனசு ஏற்காது..!!

நமக்குள் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் மற்றவரின் பார்வைக்கு நாம் சிரிப்பது போலத்தான் வாழணும்..!!
...................................

இரா. சுருளிமலை, பி.எஸ்சி [விவ]
வேளாண்மை இணை இயக்குநர்,
தூத்துக்குடி

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!