எதிரிய பேச விட்டு கவனிக்கணும்..!!


எதிரிய பேச விட்டு கவனிக்கணும்..!! துரோகிய பேச விடாமல் கவனிக்கணும்.!!


எல்லோருக்கும் இருப்பது கையளவு இதயம்..! அதில் ஒவ்வொருவருக்கும் கடலளவு காயம்..!!

தேவையான கோடுகள் வரைந்தால் ஓவியம்..! தெளிவான கொள்கைகள் இருந்தால் வாழ்க்கை ஒரு காவியம்..!!

பொதுவாக தோற்றத்தை வைத்து பெண்களைைத்தான் குழந்தைகளுடன் ஒப்பிடுவார்கள். ஆனால், மனசளவில் குழந்தை என்றால், அது ஆண்கள் தான்.!!!

மதியம் ஹோட்டலுக்கு சாப்பிட போனா, "என்ன சாப்பிடறீங்க..?" ன்னு சர்வர் கேட்பார். அதே நாலு மணிக்கு சாப்பிடப் போனா "சாப்பிட என்ன இருக்கு..?" ன்னு நாம சர்வர் கிட்ட கேட்கணும்.வாழ்க்கையில சில முடிவுகளை சரியான நேரத்துல எடுக்கணும். காலம் தவறினா இப்படித் தான் நமக்கான ஆப்சனும் குறைஞ்சிடும்..!!

சாமியை வைத்து சம்பாதிக்கும் சாமியார்களுக்குத்தான் தெரியும், சாமியார்களின் மூலதனம் சாமி அல்ல, மக்களின் மூடத்தனம் என்று..!!

ராசிக் "கல்"லை பற்றி பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருந்தால், வாழ்க்கையில் சிக்"கல்", தடங்"கல்" வந்து கொண்டே தான் இருக்கும்..!!

சிக்கணமாய் இருக்க இருக்க சேருவது பணம்..! செலவு செய்ய செய்ய சேருவது அன்பு..!!

வாழ்க்கையில் கஷ்டங்களையும், இழப்புகளையும் அதிகமா பார்த்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும் கண்ணீரோட வலியும் வேதனையும்..!!

கணவன் வீட்டில் சொல்லும் ஆலோசனையை "குறை" என்றும், மனைவி வீட்டில் சொல்லும் குறையை "ஆலோசனை" என்றும்
அழைப்பது தனிக்குடித்தனத்தில் சர்வ சாதாரணம்..!!

அப்பா அம்மா சொன்னதுக்காக அறிமுகமே இல்லாத ஆணிடம் கழுத்தை நீட்டி, கடைசி வரைக்கும் அவனது இன்ப துன்பங்களில் பங்கேற்று,
சாகுற வரைக்கும் அவனோட குப்பை கொட்டுற மனைவி 100 தாய்க்குச் சமம்..!!

எலியை துரத்த பூனையை வளர்த்து, பாலை இழந்த கதை தான் பெரும்பாலான மனிதனின் மனநிலை..!!

பிரிந்து செல்லும் நேரம் வரை, காதல் அதன் ஆழத்தை அறியாது..!!

எல்லாத் தவறுகளும் ஒருநாள் மறக்கவும் மன்னிக்கவும் கூடியதுதான். ஆனால், துரோகத்தை ஒரு நாளும் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது..!!

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஏனென்றால், ஆண் என்பது வாரிசு..! பெண் என்பது பரிசு..!!

இந்த உலகில் விலை மதிப்பிலாதது அன்பு ஒன்றுதான்..! விலையில்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை யாரும் உணருவதில்லை..!!

பணத்தைவிட, அதிக மதிப்புடையது மகிழ்ச்சி. அதை யாரும் உனக்கு கடனாகக் கூடத் தர மாட்டார்கள்..!!

உங்களை உணராத இடங்களில், ஒதுங்கியே நில்லுங்கள். அதுவே சிறந்தது..!!

மனிதன் என்கிற பெரிய சகாப்தம், மரணம் என்ற ஒற்றை வரியில் முடிந்து விடுகிறது..!!

புரியாத உறவுகளுடன் விவாதம் செய்வதை விட, விலகி இருப்பதே மேல்..!

கிடைக்காத ஒன்றுதான் சிறந்தது என நினைத்துக் கொண்டிருந்தால், கையில் இருப்பது எப்போதுமே சிறப்பாகத் தெரியாது..!!

உனது வெற்றியும், தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள்..! இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும் கேலி செய்வது மட்டுமே..!

இனிமேல் யாரையும் நம்பி விடக்கூடாது என்ற கருத்தை உறுதியாக பிடிக்கும் முன்பே, யாரோ ஒரு சாதாரண மனிதன் அதை உடைத்து விட்டு சென்று விடுகிறான்..!!

மதிக்காத இடத்தின் மண்ணை கூட மிதிக்காதே..! பொருந்தாத இடத்தில் பொருத்திக் கொள்ள நினைக்காதே..! விரும்பாத வீட்டிற்கு விருந்தினராக கூட செல்லாதே..!!

ஒருமுறை சிதறி விட்டால் மீண்டும் ஒன்று சேர்வது கடினம் உறவும் சரி..! உள்ளமும் சரி..!!

ஒரு பெண்ணை மகாராணியாகவோ இளவரசியாகவோ பார்க்க அரண்மனை தேவையில்லை. அன்பான கணவன் அமைந்து விட்டாலே போதும்..!!

அறிமுகத்தில் இருக்கும் தரம் போகப்போக இருப்பதில்லை பொருள்களிடம் மட்டும் அல்ல, சில மனிதர்களிடமும் தான்..!!

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் உன்னை நேசி..! வாழ்க்கையே சந்தோசமாக வேண்டுமானால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி..!!

உன்னிடம் பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும்..! பணம் இல்லை என்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும் ..!!

அர்த்தமில்லாத ஒரு சில சண்டைகளால், அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோசங்கள் தொலைந்து போகிறது..!!

நடிகன் அரசியல்வாதி ஆகிறான்..! அரசியல்வாதி நடிகன் ஆகிறான்..! வியப்பதற்கு ஒன்றுமில்லை இரண்டுக்குமே அடிப்படை நடிப்பு..!! [கவிக்கோ அப்துல் ரகுமான்]

வாழ்க்கையில் வெற்றியும் நிரந்தரமல்ல..! தோல்வியும் நிரந்தரமல்ல..! போராட்டம் ஒன்றே நிரந்தரம்..!!

பணமும் பதவியும் வந்த பிறகு மனிதனுக்கு வரும் முதல் வியாதி 'பார்வை குறைபாடு". தனக்கு உதவியவர்கள் யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்..!!

இருப்பவர்களை தொலைக்கக் கூடாது..! போனவர்களை பற்றி நினைக்கக் கூடாது..! இதை கடைப்பிடித்தாலே போதும். வாழ்க்கை சுகமாக இருக்கும்..!

ஒவ்வொரு முகமும் வித்தியாசப்படுவது போலவே, எண்ணங்களும் வித்தியாசப்படுகிறது..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி..! அதுதான் இந்த உலகத்தின் அழகும் கூட..! ஒன்றை ரசிப்பது என்றால் அதன் இயல்போடு ரசிக்க வேண்டும். பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விட வேண்டும். நம் ரசனைக்கு ஏற்றார் போல் ஒன்றை மாற்ற நினைப்பது தவறு..!!

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றிக்கான வழி..!! [அப்துல் கலாம்]

நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்துக் கொண்டால், ஒரு சில
உறவுகள் நீடிக்கும்..!!

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரத்தை போன்றது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம்..!!

நீங்கள் அடைந்த உயரத்தை பொறுத்துதான், உங்கள் வணக்கத்திற்கு கூட மறு வணக்கம் கிடைக்கும்..!!

சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை, நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!!

நல்லவர்களாகஇருப்பது தவறில்லை..!நல்லது, கெட்டது தெரியாத நல்லவராக இருப்பது தான் தவறு..!!

சந்தோசமாக இருக்கும் போது பாடலில் இசை பிடிக்கிறது.! துக்கமாக இருக்கும் போது பாடலின் வரிகள் பிடிக்கிறது..!!

படிப்பு கற்றுத் தருவதை விட, சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத் தரும் வாழ்க்கையை..!!

எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால், சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது..!!

தேவையற்ற எண்ணங்களை நீ சுமக்கும் வரை உன் வாழ்வில் நிம்மதி என்பது சாத்தியம் இல்லாததாகவே இருக்கும்

Comments

Popular posts from this blog

அந்த ஊரிலயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக் கிட்டிருக்காங்க.

உதட்டுக்கும் உள்ளத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்..!

இல்லாத போது தேடப்படும். தேடாமல் கிடைக்கும் போது அலட்சியம் செய்யபடும்..!!